வேலூர் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை: ஏ.சி.சண்முகம் முன்னிலை!

  0
  1
  ஏ.சி.சண்முகம்

  ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த், தீபலட்சுமி உள்ளிட்ட 28 வேட்பாளர்களுக்குப் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன

  வேலூர் : வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் ஏ.சி சண்முகம் முன்னிலை வகிக்கிறார். 

  vellore

  வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் கடந்த 5 ஆம் தேதி நடந்து முடிந்தது. வாக்குப்பதிவு முழுமையாக முடிந்தவுடன் வாக்கு பெட்டிகள், ராணிப்பேட்டையில் உள்ள பொறியியல் கல்லூரியில் 3 அடுக்கு பாதுகாப்புடன்  வைக்கப்பட்டது. இந்நிலையில் வேலூர் மக்களவை தொகுதியின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி  தொடங்கியது. தற்போது மின்னணு வாக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியுள்ளது.  வாக்குகள் 22 சுற்றுகளாக எண்ணப்படவுள்ளது.

  ac

  இந்நிலையில் ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த், தீபலட்சுமி உள்ளிட்ட 28 வேட்பாளர்களுக்குப் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. அதில் அதிமுக சார்பில் போட்டியிட்ட  ஏ.சி.சண்முகம் 25, 544 வாக்குகளும், திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்  கதிர் ஆனந்த் 24, 064 வாக்குகளும்  பெற்றுள்ளனர். அதனால்   1480 வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர்   ஏ.சி.சண்முகம் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.