வேலூர் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

    0
    2
    வாக்கு எண்ணிக்கை

    ராணிப்பேட்டையில் உள்ள பொறியியல் கல்லூரியில் 3 அடுக்கு பாதுகாப்புடன்  வைக்கப்பட்டது. 

    வேலூர்: வேலூர் மக்களவைத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதனால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

    kathir

    வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் பணம் பட்டுவாடா காரணமாக நிறுத்திவைக்கப்பட்ட நிலையில் கடந்த 5 ஆம் தேதி நடந்து முடிந்தது. வாக்குப்பதிவு முழுமையாக முடிந்தவுடன் வாக்கு பெட்டிகள், ராணிப்பேட்டையில் உள்ள பொறியியல் கல்லூரியில் 3 அடுக்கு பாதுகாப்புடன்  வைக்கப்பட்டது. 

    vellore

     

    இந்நிலையில் வேலூர் மக்களவை தொகுதியின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி  தொடங்கியது. அதில் தபால் வாக்குகள் எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் ஏ.சி சண்முகம் முன்னிலை வகிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

    vote

    தற்போது மின்னணு வாக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியுள்ளது.  வாக்குகள் 22 சுற்றுகளாக எண்ணப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.