வேறு நாட்டுக்கு போய்டுங்க கமல்ஹாசன்! அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

  0
  2
  Rajendra Balaji

  அதிமுக, திமுக அகிய இரண்டு கட்சிகளுடனும் கூட்டணி இல்லை என்றால் கமல்ஹாசன் வேறு நாட்டிற்கு தான் செல்ல வேண்டும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

  அதிமுக, திமுக அகிய இரண்டு கட்சிகளுடனும் கூட்டணி இல்லை என்றால் கமல்ஹாசன் வேறு நாட்டிற்கு தான் செல்ல வேண்டும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

  மதுரை விமான நிலையத்தில் தமிழக பால்வளத் துறை அமைச்சர் கே. டி ராஜேந்திர பாலாஜி, “தேர்தலின் போது திமுக மற்றும் அதிமுக கட்சியினர் உடன் கூட்டணி இல்லை என்று கமல்ஹாசன் கூறியுள்ளார். இரண்டு கட்சிகளிடம் கூட்டணி இல்லை என்றால் அவர் வேறு நாட்டிற்குதான் செல்லவேண்டும். 

  Rajendra Balaji
  எடப்பாடி பழனிச்சாமி மத்திய அரசோடு இணக்கமாக இருப்பதற்கான காரணம் இந்தியா வலிமையான நாடாக இருக்க வேண்டும், வல்லமையோடு இருக்கவேண்டும், பொலிவோடு இருக்க வேண்டும், தைரியத்தோடு இருக்க வேண்டும், இந்திய நாட்டை பார்த்து மற்ற நாட்டு ராணுவங்கள் அச்சப்பட வேண்டும் என்ற எண்ணத்தோடு மத்திய அரசை ஆதரிக்கிறார். கமலஹாசன், திமுக கூட்டணி கட்சிகள் எல்லாம் அரசின் கஜானா மீதே குறியாக உள்ளனர். தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் வழங்குவது குறித்து முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் முடிவு செய்வார்கள்” என தெரிவித்தார்.