வேறு நபருடன் பழகிய கள்ளக்காதலி: மணிக்கட்டை துண்டாக வெட்டிய காதலன்!

  0
  10
  மாதிரிபடம்

  கள்ளக்காதலியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தால், காதலியின் கையை வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

  கோவை : கள்ளக்காதலியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தால், காதலியின் கையை வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

  கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காரமடை அருகே உள்ள சின்ன தொட்டிபாளையம் எம்.ஜி.ஆர் காலனியைச் சேர்ந்தவர் சுஜாதா. கடந்த 29 ஆம் தேதி சுஜாதாவின் வீட்டுக்குள் இருந்து வாலிபர் ஒருவர் தலைதெறிக்க ஓடியுள்ளார். சிறிது நேரத்தில், சுஜாதா அலறல் சத்தத்துடன்,  இடது மணிக்கட்டு  துண்டிக்கப்பட்டு ரத்தம் கொட்டிய நிலையில் வெளியே வந்தார். இதைக்கண்ட அப்பகுதி மக்கள், சுஜாதாவை மீட்டு  அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

  crime

  இதையடுத்து காரமடை போலீசார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுஜாதாவிடம் விசாரணை நடத்தினர். அதில், சுஜாதாவுக்கும் பிரபு என்பவருக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்துள்ளன. சில ஆண்டுகளுக்குப் பிரபு தண்டவாளத்தைக் கடக்கும் போது  ரயிலில் அடிபட்டு  இறந்துள்ளார். குடும்ப வருமானத்திற்காகக் கட்டிட வேலைக்கு  சுஜாதா சென்றுள்ளார். அப்போது அவருக்கும் தங்கராஜ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாற, தங்கராஜ் சுஜாதாவின் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். 

  murder

  இதை தொடர்ந்து சுஜாதாவுக்கும் வேறொரு நபருக்கும் பழக்கம் ஏற்படவே இதை அறிந்த தங்கராஜ் அவருடன் தகராறு செய்துள்ளார். ஒருகட்டத்தில் சுஜாதாவுக்கு பணம் கொடுப்பதை நிறுத்தியுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போத, நீ பணம் கொடுக்காவிட்டால் யாரிடம் பணம் கேட்க வேண்டும் என எனக்குத் தெரியும் என்று சுஜாதா கூறியதால்  ஆத்திரமடைந்த தங்க ராஜ் அவரின் இடது மணிக்கட்டை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார். 

  இந்நிலையில் தலைமறைவான அவரைத் தேடி வரும் நிலையில் தங்கராஜ் மீது பெண் வன்கொடுமை, கொலை முயற்சி உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.