வேர்ல்ட் கப் மேட்ச் பாத்துக்கொண்டே தூங்கிவிடுகிறீர்களா? அட உங்களத்தான் சார்!

  0
  5
  Sleeplessness

  தொலைகாட்சி ஓடும்போதும், ஒளி அதிகளவில் இருக்கும் அறையில் தூங்கும்போதும், நல்ல டீப் ஸ்லீப் வருவதற்கு வாய்ப்பில்லை. இது அடுத்த நாள் எழுந்திருக்கும்போதே அறிகுறியை காட்டிவிடும். வேலையில் சுணக்கம் இருக்கும். உடல் எடை கூடும்.

  வந்தால் மறைக்க முடியாதது காதலும் இருமலும் என்பார்கள், தூக்கத்தையும் சேர்க்க வேண்டும். யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது மாதிரி, தூக்கம் வருவதற்கு முன்பே கொட்டாவி வந்துவிடும். எப்பாடுபட்டாலும் கொட்டாவியை மறைக்க முடியாது. சரியான தூக்கம் இல்லையென்றால் உடல்நலனுக்கு துக்கம்தான். நாங்கள் சொல்லவில்லை, அமெரிக்க ஆய்வு முடிவுகள். இந்த ஆய்வின் முடிவில் ஆராய்ச்சியாளர்கள் முன்வைப்பது என்னவென்றால், இரவில் நன்றாக தூங்குங்கள் என்பதுதான்.

  Sleeping while watching TV

  புகழ்வெளிச்சத்தில் மிதக்கும் செலிபிரட்டிகளாக இருந்தாலும், தூங்கும்போது அறைக்குள் குறைவான ஒளி இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள் என்கிறது மேற்படி ஆய்வு. தொலைகாட்சி பெட்டி அலறிக்கொண்டிருக்கும்போது, சோபாவில் இருந்தபடியே தூங்குவது கூடவே கூடாது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். தொலைகாட்சி ஓடும்போதும், ஒளி அதிகளவில் இருக்கும் அறையில் தூங்கும்போதும், நல்ல டீப் ஸ்லீப் வருவதற்கு வாய்ப்பில்லை. இது அடுத்த நாள் எழுந்திருக்கும்போதே அறிகுறியை காட்டிவிடும். வேலையில் சுணக்கம் இருக்கும். உடல் எடை கூடும். சுறுசுறுப்பு இருக்காது. வேலைக்கு வேட்டு வைக்கும். எனவே, நன்றாக தூங்குங்கள், நிம்மதியாக தூங்குங்கள். குறைவான ஒளியில் தூங்குங்கள். நிறைவாக பணி செய்திடுங்கள்!