வேண்டாம் வெங்காயம்… கீரை ஆம்லெட் சாப்பிட்டு இருக்கீங்களா? வாங்க கத்துக்கலாம்

  24
  கீரை ஆம்லெட்

  அசைவ உணவு வகைகளில் , அவித்த முட்டைக்கு அடுத்த எளிய சமையல் ஆம்லெட்தான்.ஆத்திர அவசரத்துக்கு ஒரு டபுள் ஆம்லெட் போட்டு சாப்பிட்டால்,அன்றைய காலை உணவே முடிந்து விடும்.இது விரைவான சமையல் மட்டுமல்ல சிக்கனமான சமையலுங்கூட.வெங்காயம் இல்லாத ஆம்லெட் இது!

  தேவையான பொருட்கள்:

  omellete

  இரண்டு மூன்று பசலைக் கீரை இலைகள்
  முட்டை இரண்டு
  உப்பு
  மிளகுத்தூள்
  எண்ணெய்
  அவ்வளவுதான்.

  எப்படிச் செய்வது:

  முதலில் கீரையை நீரில் அலசி சுத்தம் செய்து சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள். அடுத்தது முட்டைகளை உடைத்து ஒரு கப்பில் ஊற்றி,அதற்குத் தேவையான அளவு உப்பும் மிளகுத்தூளும் சேர்த்து நன்றாக அடித்து கலக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

  omelette

  இப்போது – சற்று குழிவான தோசைக்கல்லை எடுத்து அடுப்பில் வைத்து எண்ணை தடவுங்கள்.கல் சூடானதும் கழுவி,அடுப்பைச் சிம்மில் வைத்துவிட்டு சுத்தம் செய்து வைத்திருக்கும் பசலைக்கீரையை தோசைக்கல்லில் போட்டு இதற்குத் தேவையான அளவு உப்பும்,மிளகுத்தூளும் தூவி கீரையை லேசாக வதக்குங்கள். கீரையில் இருந்து வரும் நீர் வற்றி அது  சுருள துவங்கும்போது கீரையை தோசைக்கல் முழுவதும் பரப்பி விடுங்கள்.இப்போது ஏற்கனவே நாம் கலக்கி வைத்திருக்கும் முட்டையை எடுத்து கீரையின் மேல் ஊற்றுங்கள். இரண்டு நிமிடம் கழித்து திருப்பிப் போட்டுவிட்டு அடுப்பை அனைத்து விடலாம்.வெங்காயம் இல்லாத புஸுபுஸு ஆம்லெட் ரெடி!.