வேகமாகப் பரவி வரும் கொரோனா.. ஷீரடி சாய்பாபா கோவில் பிற்பகல் 3 மணியோடு மூடல்!

  0
  1
  shirdi sai baba

  கொவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் பாதிப்பின் உயிரிழப்பு உலக அளவில் 7000ஐ எட்டியுள்ளது.

  கொவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் பாதிப்பின் உயிரிழப்பு உலக அளவில் 7000ஐ எட்டியுள்ளது. உலக சுகாதார அமைப்பு (WHO) கொரோனா வைரஸ் பாதிப்பை  ‘தொற்றுநோய்’ என்று அறிவித்துள்ளது. இதனால் அனைத்து நாடுகளும் முடங்கியுள்ளது. இந்தியாவில் இதுவரை மொத்தம் 129 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  ttn

  இதிலிருந்து மக்களைக் காக்கும் பொருட்டு பல்வேறு கட்ட நடவடிக்கை எடுத்தும், அந்த வைரஸ் பரவுவதைத் தடுக்க முடியவில்லை, மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மக்கள் கூடும் இடங்களை தடுக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வருவதால் பிரசித்தி பெற்ற கோவில்களும் மூடப்பட்டு வருகின்றன. 

  ttn

  அதே போல மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களான புனேவில் உள்ள ஸ்ரீமந்த் தக்துஷேத் கணபதி மந்திர் மற்றும் மும்பையில் உள்ள மும்பாதேவி கோயில் உள்ளிட்ட கோவில்கள் மூடப்பட்டுள்ளன. 

  ttn

  இந்நிலையில், கொரோனாவில் இருந்து மக்களைக் காக்கும் பொருட்டு மகாராஷ்டிராவில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவிலையும் மூட கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனால், இன்று பிற்பகல் 3 மணியோடு ஷீரடி சாய்பாபா கோவில் மூடப்படுகிறது என்றும் மறு அறிவிப்பு வரும் வரை திறக்கப்படாது என்றும் அக்கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இதுவரை  39 பேர் கொரோனா அறிகுறியால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.