வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் இந்திய அணியின் கேப்டன் கோலி வரலாற்றுச் சாதனை!!

  0
  3
  கேப்டன் கோலி

  சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கடந்த 10 ஆண்டுகளில் 20 ஆயிரம் ரன்களை கடந்து புதிய வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளார் விராட் கோலி.

  இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கடந்த 2010-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டுவரை 371 சர்வதேச போட்டிகளில் பங்கேற்றிருக்கிறார். இதில் 20,018 ரன்கள் அடித்து 10 ஆண்டுகளில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளார்.

  ind vs wi

  இவருக்கு அடுத்த இடத்தில் 2000-ம் முதல் 2009-ம் ஆண்டு வரையிலான காலத்தில் 363 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 18,962 ரன்கள் அடித்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் இரண்டாவது இடத்திலும், தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த காலிஸ் 329 போட்டிகளில் 16,777 ரன்கள் அடித்து மூன்றாம் இடத்திலும் இருக்கின்றனர். 

  இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பத்தாண்டுகளில் அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலிலும் முதல் இடத்தில் இருக்கிறார். ஒருநாள் போட்டிகளில் 41 சதங்கள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் 26 சதங்கள் என மொத்தம் 67 சதங்களை அடித்திருக்கிறார்.

  virat

  ரிக்கி பாண்டிங் 55 சதங்களுடனும் சச்சின் டெண்டுல்கர் 42 சதங்களுடனும் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் இருக்கின்றனர்.

  மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் அடுத்தடுத்த சதங்களை அடித்ததன்மூலம் விராட் கோலி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக அதிக சதங்கள் அடித்தவர் என்ற பெருமையைப் பெற்றார். 

  விராட் கோலி தற்போது மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 9 சதங்களை அடித்திருக்கிறார். இதற்கு முன்பாக, சச்சின் டெண்டுல்கர் 8 சதங்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது.