வெள்ளப்பெருக்கில் டிக் டாக் செய்த இளைஞர்: 2 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்பு!

  0
  2
  டிக் டாக் செய்த இளைஞர்

  டிக் டாக்  வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரின் உடல் 2 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டது

  தெலுங்கானா : டிக் டாக்  வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரின் உடல் 2 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டது.

  tik tok

  தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் பீம்கல் மண்டலம் கோனூகொப்புலா கிராமத்தைச் சேர்ந்தவர் தினேஷ். இவர்  தனது நண்பர்களுடன் கடந்த 20ஆம் தேதி   கப்பலவாகு தடுப்பணை பகுதிக்குச் சென்றுள்ளார். அங்கு நண்பர்களுடன் குளித்துவிட்டு, மீன் பிடித்து கொண்டிருந்த அவர் டிக் டாக் செயலியில் வீடியோ ஒன்றை எடுத்துள்ளார். ஆனால்  ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மூவரும் அடித்து செல்லப்பட்டனர். இதைக் கண்ட அப்பகுதியில் இருந்தவர்கள் தினேஷின் நண்பர்கள் இருவரையும் மீட்டனர். ஆனால்  தினேஷ் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். 

   

  இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புப்படையினர் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் இரண்டு நாட்களுக்குப் பிறகு தினேஷின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது