வெள்ளக்காடாக காட்சியளிக்கும் மும்பை! ரெட் அலர்ட் எச்சரிக்கை..! 

  0
  1
  Mumbai Rain

  வெள்ளக்காடாக காட்சியளிக்கும் மும்பை! ரெட் அலர்ட் எச்சரிக்கை..! 

  மகாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து ரெட் அலர்ட் எச்சரிக்கை வி‌டுக்கப்பட்டுள்ளது. 

  மும்பையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் அனைத்துப் பகுதிகளும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து  தானே, மலாட், தாஷிரா, ராய்காட் உள்ளிட்ட பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கடல் அலைகள் 4 மீட்டர் உயரத்திற்கு மேல் எழும்புவதால் மேற்கு கடற்கரைப் பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்வதை தடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மும்பையில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. தொடர் கனமழையால் போக்குவரத்து வழிதடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வேலைக்குச் செல்வோர் கடும்‌ சிரமத்துக்கிடையே அலுவலகம் சென்றனர். சாலைகளின் பல பகுதிகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ராய்காட் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டத்தில் சாலை போக்குவரத்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மும்பை, நவி மும்பை, தானே  மற்றும் பல்கார் உள்ளிட்ட வடக்கு கொன்கன் பகுதியில் மழை தீவிரமடையும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.