வெளியான 5 மணி நேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளைக் கடந்த மாஸ்டர் ‘குட்டி ஸ்டோரி’ பாடல்

  0
  5
  kutty-story

  பிப்ரவரி 14 அன்று காதலர் தின பரிசாக மாஸ்டர் படக்குழு ‘குட்டி ஸ்டோரி’ என்ற பாடலை வெளியிட்டனர். அனிருத் இசையில், அருண்ராஜா காமராஜ் எழுதிய இந்த பாடலை விஜய் பாடியிருந்தார். விஜய் தனது சொந்தக் குரலில் இந்த பாடலை பாடியிருந்ததால் ரசிகர்கள் இந்த பாடலைக் கொண்டாடித் தீர்த்தனர்.

  பிப்ரவரி 14 அன்று காதலர் தின பரிசாக மாஸ்டர் படக்குழு ‘குட்டி ஸ்டோரி’ என்ற பாடலை வெளியிட்டனர். அனிருத் இசையில், அருண்ராஜா காமராஜ் எழுதிய இந்த பாடலை விஜய் பாடியிருந்தார். விஜய் தனது சொந்தக் குரலில் இந்த பாடலை பாடியிருந்ததால் ரசிகர்கள் இந்த பாடலைக் கொண்டாடித் தீர்த்தனர். வெளியான 5 மணி நேரத்திற்குள் 5 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது இந்த பாடல்.

  master-kuuti-stori

  விஜய் தனது ரசிகர்களுக்கு அறிவுரை கூறுவது போல் அமைந்த இந்த பாடலில் சில அனிமேஷன் காட்சிகள் இடம் பெற்றிருந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இந்த பாடலை பலரும் தங்கள் பிளேலிஸ்டில் ரிப்பீட் மோடில் வைத்துக் கேட்டுக்கொண்டிருக்கின்றனர். இப்பொது வரை இந்த பாடல் 7 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. ஒரு மில்லியன் லைக்குகளையும் நெருங்கிக் கொண்டிருக்கிறது இந்த பாடல்.

  படத்தின் அனைத்து பாடல்களுக்கு அனைவரின் பிளேலிஸ்டையும் சில நாட்கள் ரூல் செய்யப்போகின்றன என்பதில் என்ன சந்தேகமும் இல்லை! என்ன நண்பா…