வெளிமாநிலங்களில் சிக்கிய தமிழக டிரைவர்களுக்கு உதவி! – டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்

  0
  5
  REP. Image

  கொரோனா பாதிப்பு காரணமாக மாநில எல்லைகள், மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளன. அத்தியாவசிய பணிக்கு மட்டுமே எல்லைகள் திறக்கப்படுகின்றன. வெளி மாநிலங்களில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு தமிழகம் வந்துகொண்டிருந்த லாரி டிரைவர்கள் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். உணவு இன்றி அவதியுறுவதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

  கொரோனா காரணமாக தமிழகத்துக்கு திரும்ப முடியாமல் வெளிமாநிலங்களில் உணவு இன்றி அவதியுறும் தமிழக லாரி ஓட்டுநர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
  கொரோனா பாதிப்பு காரணமாக மாநில எல்லைகள், மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளன. அத்தியாவசிய பணிக்கு மட்டுமே எல்லைகள் திறக்கப்படுகின்றன. வெளி மாநிலங்களில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு தமிழகம் வந்துகொண்டிருந்த லாரி டிரைவர்கள் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். உணவு இன்றி அவதியுறுவதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

  ttv-dhinakaran

  இது குறித்து அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள ட்வீட்களில், “கொரோனா பாதிப்பைத் தடுப்பதற்காக  ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு முன்பாகவே தமிழகத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு சரக்குகளை ஏற்றிச் சென்ற லாரிகள் நாட்டின் பல்வேறு இடங்களில் நடு வழியிலேயே நிறுத்தப்பட்டிருக்கின்றன.

  அதில் சென்ற ஓட்டுநர்கள் மற்றும் கிளீனர்கள் உணவின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக வரும் செய்தி கவலை அளிக்கிறது. மேலும் லாரிகளில் உள்ள பல லட்ச ரூபாய் சரக்குகளுக்குப் பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. எனவே,மத்திய, மாநில அரசுகள் இவர்களுக்கு உதவுவதற்கான முன்னெடுப்புகளை உடனடியாக செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.