வெளிநாட்டு வாலிபருடன் ஊர் சுற்றும் பிரபல இளம் நடிகை! 

  0
  4
  சம்யுக்தா ஹெக்டே

  நடிகை சம்யுக்தா ஹெக்டே வெளிநாடு வாலிபருடன் ஊர் சுற்றிவரும் புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

  சென்னை: நடிகை சம்யுக்தா ஹெக்டே வெளிநாடு வாலிபருடன் ஊர் சுற்றிவரும் புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

  கடந்த 2016ம் ஆண்டு வெளியான கிரிக் பார்ட்டி என்ற கன்னட படம் மூலம் 17 வயதில் நடிகையானவர் சம்யுக்தா ஹெக்டே. இவர் தமிழில் ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளியான வாட்ச்மேன் படத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி ஜெயம் ரவி வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்துள்ள கோமாளி படத்தில் காஜல் அகர்வால் தவிர்த்து இவரும் நடித்துள்ளாராம்.. 

  இந்த நிலையில் இவர் எப்போதும் படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் வெளிநாட்டிற்குச் சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். அப்படி சமீபத்தில் ஐரோப்பாவுக்குச் சென்ற இடத்தில் அவர், அங்கு இருந்த ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் படி புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில்  ‘சாக்லேட்டும், வெனிலாவும் ஒன்றாக இருந்தால் நன்றாக இருக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார். 

  இவர் எப்போதும் கவர்ச்சியான உடைகள் அணிந்து புகைப்படம் எடுத்து  வெளியிடுவார். ஆனால் இதுவரை எந்த ஒரு தனிப்பட்ட மனிதரை பற்றியோ அல்லது வாழ்க்கை குறித்தோ எதுவும் வெளிப்படையாக அறிவித்தது இல்லை. அதனால் இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் சம்யுக்தா அந்த வெளிநாட்டாரைக் காதலிக்கிறார் என்று செய்தி பரப்ப ஆரம்பித்துள்ளனர்.