வெளிநாட்டு கணவனால் குடும்பம் ரெண்டானது-மனைவிக்கு  கள்ளக்காதல் உண்டானது -பஞ்சாயத்தில் மூக்கு துண்டானது… 

  0
  5
  crime

   ராமாயணத்திலிருந்து ‘சூர்ப்பனகை ‘ கதாபாத்திரத்தினை   நினைவுபடுத்தும் வகையில், அயோத்தி மாவட்டத்தில் காந்த் பிப்ரா கிராமத்தின் கிராமவாசிகள், ‘கள்ள ‘ உறவில் ஈடுபட்ட தம்பதியினரின் மூக்கை வெட்டினர்.

  ராமாயணத்திலிருந்து ‘சூர்ப்பனகை ‘ கதாபாத்திரத்தினை   நினைவுபடுத்தும் வகையில், அயோத்தி மாவட்டத்தில் காந்த் பிப்ரா கிராமத்தின் கிராமவாசிகள், ‘கள்ள ‘ உறவில் ஈடுபட்ட தம்பதியினரின் மூக்கை வெட்டினர்.

  crime

   அந்த   பெண்ணின் கணவர் சவுதி அரேபியாவில் பணிபுரிவதால் 23 வயதான வாலிபர்  திருமணமான  சுமார் 30 வயதுடைய பெண்ணுடன்  கள்ள உறவில் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.செவ்வாயன்று, அந்த நபர் அந்தப் பெண்ணின் வீட்டிற்குச் சென்றபோது  அவரது மாமியார் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களால் பிடிக்கப்பட்டார்.

  wife

  குடும்ப உறுப்பினர்கள் இருவரையும் ஒரு தூணில் கட்டிவைத்து  மூக்கை வெட்டினர். பின்னர் குடும்பத்தினர் தம்பதியினரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபிறகு  போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

  cut

  இந்த சம்பவத்தில் தொடர்புடைய பெண்ணின் மாமியார் மற்றும் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக அயோத்தி எஸ்.எஸ்.பி ஆஷிஷ் திவாரி தெரிவித்தார்.