வெளிநாட்டுல வாங்குற ரூ.1லட்சம் வேண்டாங்க…. நம்ம ஊரு சுண்டல் கடையே போதும்! அசத்தும் வாலிபர்!! 

  0
  7
  சுதர்சன்

  சிங்கப்பூரில் மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பாதித்த வாலிபர் இன்று தந்தை சொன்ன வார்த்தைக்காக புதுக்கோட்டையில் சுண்டல் கடை வைத்து பிழைப்பை நடத்திவருகிறார். 

  சிங்கப்பூரில் மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பாதித்த வாலிபர் இன்று தந்தை சொன்ன வார்த்தைக்காக புதுக்கோட்டையில் சுண்டல் கடை வைத்து பிழைப்பை நடத்திவருகிறார். 

  புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுதர்சன். இவர் அங்கிருக்கும் பேருந்து நிலையத்தில் பட்டாணி சுண்டல் விற்றுவருகிறார். நன்கு படித்திருக்கும் சுதர்சன் இதற்கு முன்பு சிங்கப்பூரில் ஓட்டுநராக பணியாற்றியதாகவும், மாதம் ஒரு லட்சம் ரூபாய் வரை சம்பாதித்ததாகவும் கூறுகிறார். அந்த வேலையைவிட்டு சொந்தவூருக்கு வந்ததாகவும் அதற்கான காரணத்தையும் சுதர்சன் தெரிவிக்கிறார். 

  சுதர்சனின் தாத்தா இதுபோன்று சுண்டல் விற்றதாகவும், அவருக்கு அடுத்து அவருடைய அப்பா பேருந்து நிலையங்களில் சுண்டல் விற்றதாகவும் தெரிவிக்கும் அவர், தந்தை இறப்புக்கு பின் மனமுடைந்ததால் இந்த தொழிலுக்கு திரும்பியதாக வேதனையுடன் தெரிவிக்கிறார். 

  சுதர்சன்

  திருமணம் முடிந்த கையோடு மனைவியை ஊரில் விட்டுவிட்டு, சிங்கப்பூர் சென்றுவிட்டதாகவும், அங்கிருக்கும்போது ஒருநாள் அப்பா இறந்ததாக தகவல் வந்ததாகவும் கூறும் சுதர்சன், பாரம்பரியமாக 2 தலைமுறையாக காத்துவந்த தொழிலை விடக்கூடாது என்றும்,  அவருடைய அப்பா கூறிய வார்த்தைக்காவும் மீண்டும் சிங்கப்பூர் செல்லாமல் அப்பாவின் இறப்புக்கு பின் தந்தையை போன்று தானும் பேருந்து நிலையத்தில் சுண்டல் விற்றுவருவதாகவும் தெரிவிக்கிறார். 

  முன்பெல்லாம் 10 மணிக்கு வந்தால் 2 மணிக்குள்ளே தீர்ந்துவிடும், ஆனால் இப்போது அப்படி இல்லை 5 மணி ஆகிறது என்றும் சுதர்சன் கூறுகிறார். மேலும் ஒரு சில நாட்கள் சுண்டல் மீதமாகி விடுவதாக தெரிவிக்கிறார்.