வெளிநாட்டுக்கு ஓடிய அதிமுக எம்.எல்.ஏ… விரக்தியில் எடுத்த முடிவு..!

  4
  எடப்பாடி பழனிசாமி

  சீனியரான தமக்கு வெகுநாட்களாக அமைச்சர் பதவி கேட்டு வருகிறார் ராஜன் செல்லப்பா. இடையில் இரட்டை தலைமைக்கு ஏதிராக முழங்கினார். எதுவும் நடக்கவில்லை.

  மதுரை வடக்கு தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா ஊரில் இருந்தால் தினமும் காலையும், மாலையும் தனது அலுவலகத்துக்கு வந்துவிடுவார். கடந்த வாரம் ஐந்து நாட்களாக அவரை அலுவலகம் பக்கம் பார்க்கவே முடியவில்லை.

  Rajan chellappa

  சென்னைக்கும் போகவில்லை. இதனால், அவரை தேடி வந்த தொகுதி மக்கள் குழம்பி போய் விட்டார்கள். விசாரித்தபோது ராஜன் செல்லப்பா ஐந்து நாள் பயணமாக துபாய் போய் வந்தது தெரிய வந்தது. அரசு சார்பில் வெளிநாடு போக, முதல்வரிடம் அனுமதி கேட்டுக்கொண்டே இருந்திருக்கிறார். அது தாமதம் ஆனதால் வெறுத்துப் போனவர், சொந்த பயணமாக துபாய் போய் விட்டு வந்து இருக்கிறார். 

  Rajan chellappa

  சீனியரான தமக்கு வெகுநாட்களாக அமைச்சர் பதவி கேட்டு வருகிறார் ராஜன் செல்லப்பா. இடையில் இரட்டை தலைமைக்கு ஏதிராக முழங்கினார். எதுவும் நடக்கவில்லை. சரி வெளிநாட்டு பயணத்துக்கு கேட்டுள்ளார். பாவம் அதைக்கூட செய்யவில்லை எடப்பாடி. ஆமாம் வெளிநாட்டு பயணத்திற்கு அரசு சார்பில் செல்ல இந்த ராஜன் செல்லப்பா அமைச்சரா? இல்லை முதல்வரா? இல்லை துணை முதல்வரா?