வெளிநாட்டில் வேலை பார்க்கும் தந்தை…அவருக்கு பிடித்ததை வாங்கிக்கொடுக்க நினைத்த அண்ணன்,தம்பிக்கு நேர்ந்த பரிதாபம்..!?

  0
  3
  Van

  அப்பாவுக்கு பிடிக்கும் என்று ஆசை ஆசையாக வாங்கியப் பொருள்களுடன் நண்பரைப் பார்க்கப் போன அண்ணன்,தம்பி இரண்டு பேருக்கு ஏற்பட்ட பரிதாபமான சம்பவம் பெரம்பலூர் பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது..!

  அப்பாவுக்கு பிடிக்கும் என்று ஆசை ஆசையாக வாங்கிய பொருள்களுடன் நண்பரைப் பார்க்கப் போன அண்ணன்,தம்பி இரண்டு பேருக்கு ஏற்பட்ட பரிதாபமான சம்பவம் பெரம்பலூர் பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது..!

  பெரம்பலூரைச்  சேந்த  ஃபையாஸ் மற்றும் ஜமீல்,இவர்களது தந்தை வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.அவருடன் பணியாற்றும் நண்பர் சொந்த ஊருக்கு வந்துவிட்டு வெளிநாடு போகிறார் என்பதை அறிந்து ,தங்களது  தந்தைக்கு தேவையான பொருட்களை அவரது நண்பரிடம் கொடுத்து விட ஃபையாஸ் மற்றும் ஜமீல் தஞ்சாவூரை நோக்கி  சென்றனர். போகும் வழியில் கீழப்பலூர் அருகே,  அரியலூர் நோக்கி சென்று கொண்டிருந்த வேன் திடீரென இவர்கள் சென்ற பைக் மீது மோதியது. இதில் அண்ணன், தம்பி இருவரும் வேனுக்கு அடியில் மாட்டிக் கொண்டனர். 

  மோதிய வேன் அருகிலிருந்த சுவரில் உராசியதால் தீப்பற்றி எரிந்தது. வேனின் அடியில் சிக்கிக் கொண்ட  ஃபையாஸ் மற்றும் ஜமீலின் உடல் தீயில் கருகியது. இதனையறிந்து  விரைந்து சென்ற தீயணைப்புத் துறை வேனில் இருந்த 14 பேரையும் பத்திரமாக மீட்டனர். அதில் 3 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இச்சம்பவத்தினால்  கீழப்பலூர் பகுதி காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.