வெளிநாட்டில் ஐபிஎல் தொடரை நடத்த திட்டம்? – இந்த 3 நாடுகளில் நடக்க வாய்ப்பா?

  0
  3
  Ganguly

  நடப்பு ஆண்டில் ஐபிஎல் தொடரை வெளிநாட்டில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

  மும்பை: நடப்பு ஆண்டில் ஐபிஎல் தொடரை வெளிநாட்டில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

  13-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா வருகிற மார்ச் 29-ஆம் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால் இந்தியாவில் நிலவும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஏப்ரல் 15-ஆம் தேதி வரை ஐபிஎல் போட்டிகளை இந்திய கிரிக்கெட் வாரியம் ஒத்தி வைத்துள்ளது. அறிவித்துள்ளது. இதனால் போட்டி அட்டவணை முழுவதுமாக மாற்றியமைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக கொரோனா வைரஸ் பரவல் காரணமாக போட்டிகளை ஒத்தி வைக்கும்படி விளையாட்டுத் துறை அமைச்சகம் பிசிசிஐ-க்கு அறிவுறுத்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

  ttn

  இந்த நிலையில், ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு பின்பும் நிலைமை சீராக இல்லாவிட்டால் இந்தாண்டு ஐபிஎல் போட்டிகளை வெளிநாட்டில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜிம்பாப்வே, பார்படாஸ், இலங்கை ஆகிய மூன்று நாடுகளில் ஏதாவது ஒன்றில் ஐபிஎல் போட்டிகளை நடத்த வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இந்த மூன்று நாடுகளும் இந்திய கிரிக்கெட் வாரியத்துடன் நல்ல நட்புறவில் இருந்து வருபவை என்பதால் இவை தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தகவல் கசிந்துள்ளது.