வெளிநாடு, வெளிமாநிலங்களுக்கு செல்லாதவர்களுக்கும் கொரோனா பாதிப்பு!

  0
  2
  கொரோனா

  கொரோனா வைரஸால் தமிழகத்தில் 67 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் மதுரையை சேர்ந்த நபர் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்தார்.

  கொரோனா வைரஸால் தமிழகத்தில் 67 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் மதுரையை சேர்ந்த நபர் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்தார். அவரை தவிர வேறு யாரும் கொரோனாவால் உயிரிழக்கவில்லை. கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த 7 பேரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழக்கவில்லை என்றும் அவர்களுக்கு ஏற்கனவே உடல்நலக்குறைவு இருந்ததாகவும் தமிழக சுகாதாரத்துறைதெரிவித்தது. 

  ttn

  சென்னையில் மட்டுமே 21 பேர் கொரோனாவால் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மற்றும் சில தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதே போல, நெல்லை, கோவை, திருப்பூர், வேலூர், ராணிப்பேட்டை, தஞ்சை, விருதுநகர், அரியலூர், கரூர் ஆகிய மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் பரவியிருக்கிறது.

  ttn

  இந்த கொரோனா வைரஸ் வெளிநாடு அல்லது வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் மூலமாகவே அதிகமாக பரவுகிறது என்று கூறப்பட்டு வந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களுள் 25 பேர் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களுக்கு பயணம் செய்யாதவர்கள் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் 43 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.