வெற்றியாளரின் சான்றிதழில் தோற்ற வேட்பாளரின் பெயர்.. கடலூரில் நடந்த குளறுபடி !

  0
  1
  jayalakshmi

  அதே போல  ஜெயலட்சுமிக்கு கொடுக்கப்பட்ட சான்றிதழில் விஜயலட்சுமி என்று எழுதப் பட்டிருந்தது.

  கடலூர் மாவட்டம் குமளங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்குப் பூட்டு சாவி சின்னத்தில் விஜயலட்சுமி என்பவரும், ஆட்டோ சின்னத்தில் ஜெயலட்சுமி என்பவரும் போட்டியிட்டனர். இன்று இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதில் ஜெயலட்சுமி வெற்றி பெற்றுள்ளார். தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு வெற்றி பெற்றவர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்படும். அதே போல  ஜெயலட்சுமிக்கு கொடுக்கப்பட்ட சான்றிதழில் விஜயலட்சுமி என்று எழுதப் பட்டிருந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த  ஜெயலட்சுமி, இது குறித்துத் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார். 

  tt

  இதனிடையே, சான்றிதழில் தன் பெயர் தான் உள்ளது என்பதால், ஊராட்சி தலைவர் நான் தான் என்று பெற்றதாகக் கூறி திருப்பிக் கொடுக்க மறுத்துள்ளார். அதனால்,  கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தின் அருகே ஜெயலட்சுமி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த இரண்டு தரப்பினரும் போராட்டம் நடத்தியதால் அங்குப் பரபரப்பு நிலவியது.