வெற்றிக்காக வெறியோடு காத்திருக்கும் நடிகை… தெலுங்கில் தடம் பதிப்பாரா ரவுடி பேபி!?

  0
  7
  sai pallavi

  ரவுடி பேபி சாய் பல்லவி தற்போது தெலுங்கில் லவ் ஸ்டோரி என்ற படத்தில் நடித்திருக்கிறார் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய பல்லவி,  “முதல்முறையாக நாகசைதன்யாவுடன் ஜோடியாக நடித்துள்ளேன். மக்கள் எந்த அளவுக்கு இந்த படத்தை வரவேற்கப் போகிறார்கள் என்பதை அறிய மிகவும் ஆவலாக இருக்கிறேன்” என்று கூறினார்.

  loves tory

  லவ் ஸ்டோரி ஒரு டான்ஸ் அடிப்படையிலான படம், இது ஏப்ரல் 2 ஆம் தேதி வெளிவர இருக்கிறது. இந்த படம் தவிர, ராணா நடிக்கும் விராட்டா பர்வம் படத்திலும் நடித்து வருகிறார் சாய் பல்லவி. இந்த படத்தில் ஒரு நக்சலைட் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

  விராட்டா பர்வம் மற்றும் லவ் ஸ்டோரி ஆகிய இந்த இரண்டு திரைப்படங்களின் மூலம் சாய் பல்லவி டோலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடிப்பார்  என நம்பப்படுகிறது. தமிழில் மாரி 2 மற்றும் என்ஜிகே படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியைப் பெறாததால் ஒரு நல்ல படத்திற்காக காத்திருக்கிறார்.

  sai

  தற்போது விரத பர்வம் மற்றும் லவ் ஸ்டோரி ஆகிய இரு படங்களின் படப்பிடிப்பு ஹைதராபாத்திலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நடைபெறுகிறது. தனது இயல்பான நடிப்பால் பிரபலமான சாய் பல்லவி, இரண்டு திரைப்படங்களுடனும் தனது வெற்றிப்பாதைக்கு திரும்புவார் என நம்புவோம்!