வெறித்தனம்: யூடியூப்பில் மெகா சாதனை செய்த விஜய்! 

  0
  6
  விஜய்

  பிகில் படத்திலிருந்து வெளியான வெறித்தனம் பாடல் யூடியூப்பில் சாதனை படைத்துள்ளது. 

  சென்னை: பிகில் படத்திலிருந்து வெளியான வெறித்தனம் பாடல் யூடியூப்பில் சாதனை படைத்துள்ளது. 

  அட்லீ- விஜய் காம்போ மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் பிகில். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இதில் விஜய் அப்பா – மகன் என்ற இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தீபாவளிக்கு வெளியாக இருக்கும் பிகில் படத்தின் போஸ்டர்கள், சிங்கப்பெண்ணே பாடல் சமீபத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம ஹிட் அடித்தது. 

  அதைத்தொடர்ந்து கடந்த 2ம் தேதி விஜய் தனது குரலில் பாடியுள்ள வெறித்தனம் பாடல் வெளியானது. நம்ம நெஞ்சுக்குள்ள குடியிருக்கும் நம்ம சனம் வெறித்தனம்…இன்னா இப்ப லோக்கலுன்னா நாம கெத்தா உலாத்தணும்…. என்று அவர் பாடியுள்ள பாடலை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

  இந்நிலையில் வெறித்தனம் பாடல் வெளியானது முதல் யூடியூப்பில் சக்கைப்போடு போட்டு வருகிறது. வியூஸ், லைக்ஸ் என அனைத்திலும் சாதனை படைத்து ட்ரெண்டிங்கில் முதலிடத்திலிருந்து வருகிறது. தற்போது இந்த பாடல் 1 கோடி பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. இதுவரை இந்தப்பாடல் 9,30,000 பேர் லைக் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.