வெப்பநிலை அதிகரித்தாலும் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாது: உலக சுகாதார நிறுவனம்

  0
  1
  கொரோனா வைரஸ்

  கொரோனா தொற்று பாதிப்பால் இதுவரை உலகில் 66ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் உலகளவில் 12லட்சத்து 25ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பை சந்தித்துள்ளனர்.

  கொரோனா தொற்று பாதிப்பால் இதுவரை உலகில் 66ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் உலகளவில் 12லட்சத்து 25ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பை சந்தித்துள்ளனர். சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு முற்றிலுமாக கட்டுப்பாட்டுக்கு வந்துள்ளது. ஆனால் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, ஈரான் போன்ற நாடுகளில் கொரோனா பாதிப்பால் மக்கள் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். உலக நாடுகளை அச்சுறுத்திய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவிவருகிறது. இந்தியாவில் 3 ஆயிரத்து 500க்கும் ஏற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 99 பேர் உயிரிழந்துள்ளனர். 

  who

  இந்நிலையில் வெப்பநிலை அதிகரித்தாலும் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. கோடைக்காலத்தில் வைரஸ் பரவல் தாக்கம் குறையும் என தகவல்கள் வெளியான நிலையில் உலக சுகாதார நிறுவனம் அதற்கு விளக்கம் அளித்துள்ளது. வெப்பநிலை அதிகம் உள்ள நாடுகளில் கொரோனா தாக்கம் உள்ளது எனவும் கூறியுள்ளது.