வெப்சீரிஸில் களமிறங்கும் சமந்தா..! திருமணத்திற்கு பின் திரைத்துறை ஒதுக்கியதா? 

  0
  1
  Samantha

  தமிழ் மற்றும் தெலுங்குத் திரைத்துறையில் பிரபல நடிகையாக வலம்வந்த சமந்தா, தற்போது இந்தித் தொடரின் இரண்டாவது சீசனில் நடிக்க களமிறங்கியுள்ளார். 

  தமிழ் மற்றும் தெலுங்குத் திரைத்துறையில் பிரபல நடிகையாக வலம்வந்த சமந்தா, தற்போது இந்தித் தொடரின் இரண்டாவது சீசனில் நடிக்க களமிறங்கியுள்ளார். 

  ‘தி ஃபேமிலி மேன்’ என்ற தொடரின் இரண்டாவது சீசனில் வெயிட்டான ரோலில் சமந்தா களமிறங்கவுள்ளார்.  அதற்காக சமந்தாவுக்கு திரைப்படங்களில் மவுசு குறைந்ததாக அர்த்தமில்லை. இந்த வெப்சீரிஸில் மாஸ் கெட் அப் ஒன்று சிக்கியுள்ளதால் இதில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளாராம் சமந்தா. இந்தியில் கடந்த இரு வாரங்களுக்கு முன் அமேசான் ப்ரைம் ஆன்லைன் ஸ்டீரிமிங் பிளாட்பார்மில் ஒளிபரப்பாகிய, தி ஃபேமிலி மேன் என்ற தொடர் ரசிகர்களை அதிகம் ஈர்த்துள்ளது. 

  Samantha

  ராஜ் நிதிமோரு இயக்கியுள்ள இந்த தொடரில் இந்தி நடிகர் மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த தொடரின் இரண்டாவது சீசனில் நடிக்க சமந்தா ஒப்பந்தமாகியுள்ளார். அவருடன் இணைந்து தமிழ் நடிகையான தேவதர்சினியும் நடிக்கவுள்ளார்.