வெட்டி பந்தாவுக்காக நோட்டாவுக்கு ஓட்டு போடுவதா?

  0
  1
  NOTA

  ஆளும் அதிமுக கூட்டணியோ, இல்லை எதிர்கட்சியான திமுகவோ, அல்லது இருவருக்கும் மாற்றாக வரக்கூடியவர் என அதிகம் எதிர்பார்க்கப்படும் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கோ, அதுவும்கூட இல்லையென்றால் கமலுக்கோ, அவரும் வேண்டாம் என்றால், தமிழகம் முழுவதும் சுயேட்சையாக நின்ற 543 வேட்பாளர்களுக்கோ தங்கள் வாக்கை செலுத்தாமல், நோட்டாவுக்கு செலுத்தியவர்களை என்னவென்று சொல்வது?

  பணப்புழக்கம் அதிகம் இருந்த காரணத்தால் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்ட வேலூர் மற்றும் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்ட காரணத்தால் நீலகிரி என இரு தொகுதிகளை கழித்துவிட்டுப் பார்த்தால், நாம் தமிழர் கட்சி தமிழகத்தில் 37 தொகுதிகளில் களம் இறங்கியது. தமிழகம் முழுவதும் 16 லட்சத்து 45,185 வாக்குகளை அக்கட்சி பெற்றுள்ளது. இந்த 37 தொகுதிகளில் 14 தொகுதிகளில் 50,000க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளது.

  திருப்பெரும்புதூர் தொகுதியில் அக்கட்சியின் மகேந்திரன் மிக அதிகமாக 84,979 வாக்குகளையும், மிகக்குறைவாக கன்னியாகுமரியில் 17,069 வாக்குகளையும் பதிவு செய்துள்ளது. தமிழகம் முழுவதும் 38 தொகுதிளிலும் சேர்த்து 5 லட்சத்து 41,150 வாக்குகளை நோட்டா பெற்றுள்ளது. தமிழகம் முழுவதும் 543 சுயேட்சைகள் போட்டியிட்டு 30 லட்சத்து 93,626 வாக்குகளையும், மக்கள் நீதி மய்யம் 38 தொகுதிகளில் 15 லட்சத்து 75,620 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

  TN Parties

  நமது சந்தேகம் என்னவென்றால், ஆளும் அதிமுக கூட்டணியோ, இல்லை எதிர்கட்சியான திமுகவோ, அல்லது  இருவருக்கும் மாற்றாக வரக்கூடியவர் என அதிகம் எதிர்பார்க்கப்படும் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கோ, அதுவும்கூட இல்லையென்றால் கமலுக்கோ, அவரும் வேண்டாம் என்றால், தமிழகம் முழுவதும் சுயேட்சையாக நின்ற 543 வேட்பாளர்களுக்கோ தங்கள் வாக்கை செலுத்தாமல், நோட்டாவுக்கு செலுத்தியவர்களை என்னவென்று சொல்வது? மேற்கண்ட கட்சி வேட்பாளர்களோ அல்லது சுயேட்சை வேட்பாளர்களையோகூட நோட்டா நேயர்களின் விருப்பத்தை பெறாதபோது, வானத்தில் இருந்து புதிய வேட்பாளர்கள் குதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களா? நோட்டாவுக்கு பதிவாகும் வாக்குகள் சாதிப்பது என்ன? நோட்டாவுக்கு போட்டேன் என சொல்வது வீண் பந்தா என்பதை இளம் வாக்காளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.