வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி! வழக்கறிஞர்கள் அடையாள அட்டையை காண்பித்து வர அறிவுறுத்தல்!! 

  0
  1
  உயர்நீதிமன்றம்

  சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வரும் அனைத்து வழக்கறிஞர்களும் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும் காவல்துறை அறிவித்துள்ளது.

  உயர்நீதி மன்ற தலைமை பதிவாளருக்கு அதில் ஹர்தர்ஷன் சிங் என்பவர் தனது மகனுடன் இணைந்து வரும் 30 ஆம் தேதி உயர்நீதி மன்றத்தில் வெடிகுண்டு வைக்கப் போவதாகவும், தான் இடத்தையம் செல்பேசி எண்ணையும்  அடிக்கடி மாற்றி கொண்டே இருப்பேன், அதனால் என்னை தேட முயற்சி செய்யாதீர்கள் என்று கூறி மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளார். காவல்துறையும் அது குறித்து விசாரணை நடத்தி  கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் கூடுதல் துணை ஆணையர் தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில், வழக்கறிஞர் சங்கங்களுக்கு ஆணையர் சுற்றறிக்கை அனுப்பினார்.

  வழக்கறிஞர்

  அதில், ‘உயர்நீதிமன்றத்திற்கு வரும் அனைத்து வழக்கறிஞர்களும் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும். வழக்கறிஞர்களின் வாகனங்கள் சோதனைக்கு பின்னரே நீதிமன்றத்திற்குள் அனுமதிக்கப்படும். பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு அனைத்து வழக்கறிஞர்களும் ஒத்துழைப்பு தர வேண்டும்’ குறிப்பிடப்பட்டுள்ளது.