‘வெங்காய மாலை’ மாற்றிக் கொண்ட மணமக்கள்.. ரொம்ப பணக்காரங்களா இருப்பாங்க போல!

  24
  onion garland

  நடிகர் அக்சய் குமார் அவரது மனைவி டிவிங்கிள் கன்னாவுக்கு வெங்காயத்தால் ஆன காதணிகள் மற்றும் வளையல்களைப் பரிசாகக் கொடுத்தார்.

  மழை பாதிப்பின் காரணமாக வெங்காய விலை அதிரடியாக உயர்ந்தது. ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.200 வரை விற்கப்பட்டது. இது பொதுமக்களிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைக் கட்டுப்படுத்த வெளிநாடுகளில் இருந்து வெங்காயங்கள் இறக்குமதி செய்யப்பட்டாலும் விலை குறைந்ததாகத் தெரியவில்லை. அதனால், வெங்காயம் தற்போது மிகவும் அரிதான பொருளாக மாறிவிட்டது. 

  onion

  நேற்று நடிகர் அக்சய் குமார் அவரது மனைவி டிவிங்கிள் கன்னாவுக்கு வெங்காயத்தால் ஆன காதணிகள் மற்றும் வளையல்களைப் பரிசாகக் கொடுத்தார். ஏனெனில், வெங்காயம் தான் தற்போது விலை மதிக்க முடியாத பொருள் என்று கூறினார். இது, இணையதளத்தில் மிகவும் வைரல் ஆனது. 

  ttn

  இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநில வாரணாசியில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் மணமக்கள் வெங்காயம் மற்றும் பூண்டால் ஆன மாலையை மாற்றிக் கொண்டுள்ளனர். இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதற்குப் பலரும் லைக்ஸ் மற்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.