வீரமும், வெற்றியும் கிடைக்க இவரை தொடர்ந்து வழிபடுங்க!

  0
  4
  வீரபத்திரர்

  சிவனை மனமுருகி வேண்டுபவர்களுக்கு வீரபத்திரரைத் தெரிந்திருக்கும். ஏனெனில் சிவனின் இன்னொரு அம்சம் தான் வீரபத்திரர்.

  வாழ்க்கையில் எந்தவொரு முடிவுகளை எடுப்பதற்கும் மிக நீண்ட நேரமாக தடுமாறி வருகிறீர்களா? எதிர்காலத்தைப் பற்றிய பயம் வாட்டி வதைக்கிறதா? வீரபத்திரரை வழிப்படத் துவங்குங்கள். சிவனை மனமுருகி வேண்டுபவர்களுக்கு வீரபத்திரரைத் தெரிந்திருக்கும். ஏனெனில் சிவனின் இன்னொரு அம்சம் தான் வீரபத்திரர்.  சிவபெருமானின் 64 வடிவங்களில் ஒரு வடிவமாக இருப்பவர் வீரபத்திரர். 

  veerapathirar

  சிவனின் திருவிளையாடல்கள் நமக்குத் தெரிந்தது தான். அப்படி தீயவர்களை அழிப்பதற்காக சிவபெருமான் எட்டு முறை போர்க்கோலம் தரித்தார். ஒவ்வொரு முறையும் வெவ்வேறு இடங்களில் போர் நடந்தன. அந்த எட்டு இடங்களும் அட்ட வீரட்ட தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இதில், 6 தலங்களில் சிவன்  நேரடியாக போரிட்டு அசுரர்களை அழித்தார். மீதமுள்ள இரண்டு இடங்களில் சிவன் நேரடியாக பங்கேற்கவில்லை. அதற்கு பதிலாக வீரபத்திரரையும், பைரவரையும் உருவாக்கி அனுப்பி வைத்தார். அவர்கள் முறையே தட்சனையும், பிரம்மனையும்  வதம் செய்தார்கள். 

  veerapathirar history in tamil

  தேவர்களுக்கு உதவி செய்வதற்காகவே 8 போர்களில் 7 போர்களை சிவன் நடத்தினார். ஆனால் தேவர்களை எதிர்த்து நடத்தப்பட்ட போருக்கு வீரபத்திரரை அனுப்பி வைத்தார். வீரபத்திரரின் ஆவேசத்தால் எல்லா தேவர்களும் நிலைக்குலைந்து போனார்கள்.  இந்த வீரபத்திரரை தொடர்ந்து வழிபட்டு வந்தால் வாழ்வில் ஏற்படுகிற பயம் மறைந்து விடும். எடுக்கும் செயல்களில் வெற்றிகள் தேடி வரும். வீரமும், விவேகமும் வெளிப்படும்