வீட்டை விட்டு வெளியே வராதீங்க….. வந்தால் கழுதை மீது ஊர்வலம்… அதிரடி காட்டும் மகாராஷ்டிரா கிராமம்

  25
  கழுதை

  மகாராஷ்டிரா கிராமம் ஒன்றில், லாக்டவுனை மீறி மக்கள் வெளியே வந்தால் கழுதை மேல் உட்கார வைத்து ஊர்வலம் வரும் தண்டனை வழங்கப்படும் கிராம பஞ்சாயத்து அறிவித்துள்ளது.

  நம் நாட்டில் தொற்று நோயான கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் முடக்கம் அமலில் உள்ளபோதிலும் பல பகுதிகளில் சிலர் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வந்து கொரோனா மேலும் தீவிரமாக பரவுவதற்கு வழி செய்கின்றனர். மக்களை வெளியே வராமல் தடுக்க மகாராஷ்டிராவில் ஒரு கிராமம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை தற்போது நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்படுகிறது.

  வெளியே நடமாடும் மக்கள்

  மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ளது தகாலி கிராமம். இந்த கிராமத்திலும் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த முடக்கம் நடைமுறையில் உள்ளபோதிலும், பலர் வீட்டை வெளியே வருவது தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து இதற்கு முடிவு கட்டும் நோக்கில், வீட்டை வெளியே வருபவர்களுக்கு தண்டனை வழங்க அந்த கிராம பஞ்சாயத்து முடிவு எடுத்தது. 

  கழுதை

  இதன்படி, லாக்டவுனை மீறி முதல் முறை வீட்டை விட்டு வெளியே வருபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து 3 முறை முடக்கத்தை மீறி வெளியே வந்தால் அந்த நபரை கழுதை மேல் உட்கார வைத்து ஊர்வலமாக அழைத்து செல்லும் தண்டனை வழங்கப்படும். தகாலி கிராமத்தினரின் நடவடிக்கையை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.