வீட்டைவிட்டு வெளியேறாமல் இருந்தால் லட்சக்கணக்கான உயிர்களை காப்பாற்றலாம் – சச்சின்!

  0
  1
  sachin

  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் சுமார் 4 லட்சத்து 40 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ல நிலையில் உயிரழப்பு 20 ஆயிரமாக அதிகரித்துள்ளது.  இந்தியாவில் 600 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 10 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்

  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் சுமார் 4 லட்சத்து 40 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ல நிலையில் உயிரழப்பு 20 ஆயிரமாக அதிகரித்துள்ளது.  இந்தியாவில் 600 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 10 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸால் மதுரையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்த நிலையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருவதையடுத்து இந்தியா முழுதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  வீட்டிற்குள்ளேயே இருக்க தமிழக அரசும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. 

   

   

  இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், “சிறிய விஷயங்கள் செய்வதற்கு அவ்வப்போது கடினமாக இருக்கும் என்றும், ஏனென்றால் அதற்கு ஒழுக்கமும், மன உறுதியும் அவசியம்.  பிரதமர் நரேந்திர மோடி கூறியபடி 21 நாட்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம், இந்த சின்ன விஷயம் லட்சக்கணக்கான உயிர்களை காப்பாற்றும். நாம் அனைவரும் ஒற்றுமையுடன் கொரோனா எனும் யுத்தத்திற்கு எதிராக நிற்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.