“வீட்டில் மக்களுக்கு போரடிக்கலாம்…ஆனால் வேறு வழியில்லை!” – மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே

  0
  1
  Uddhav Thackeray

  கொரோனா வைரஸை வெல்ல வீட்டில் தங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

  மும்பை: கொரோனா வைரஸை வெல்ல வீட்டில் தங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

  கொரோனா வைரஸை வெல்ல வீட்டில் தங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று மாநில மக்களுக்கு ஒரு கடுமையான செய்தியில் தெரிவித்தார். இருந்தாலும், ஊரடங்கால் ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தம் தெரிவிப்பதாக முதல்வர் கூறினார்.

  Maharashtra CM

  “வீட்டில் தங்கியிருக்கும்போது மக்கள் பல்வேறு வகையான பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். மக்கள் சலித்துக் கொண்டிருக்கிறார்கள். அதைப் பற்றி நான் வருந்துகிறேன். ஆனால் கொரோனாவை வெல்ல வீட்டில் தங்குவதைத் தவிர வேறு வழியில்லை” என்று தாக்கரே கூறியுள்ளார்.

  நாட்டிலேயே மகாராஷ்டிரா தான் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாகும். கொரோனாவால் அதிக இறப்புக்கள் மற்றும் பாதிப்புகள் இம்மாநிலத்தில் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் 5,000-க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகளில் 1,018 பாதிப்புகள் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவை. இம்மாநிலத்தில் 64 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.