வீட்டில் உட்கார்ந்த நிலையில் கழுத்துக்கு செய்ய வேண்டிய பயிற்சிகள்!

  0
  2
  கழுத்துக்கான பயிற்சி

  கொரோனா பாதிப்பு காரணமாக வீட்டில் முடங்கிப் போயிருக்கிறோம். பலருக்கும் வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் வசதி கிடைத்திருக்கும். அலுவலகத்தில் மேசை மீது டெஸ்க்டாப், லாப்டாப் வைத்து வேலை செய்திருப்போம். வீட்டில் அந்த வசதியை எல்லாம் எதிர்பார்க்க முடியாது. சிறிய மேசை அல்லது மடியில் லேப்டாப்பை வைத்து வேலை பார்க்க வேண்டியிருக்கும். உங்களுக்கான எளிய வார்ம்அப் பயிற்சிகள் இங்கே…

  கழுத்துக்கான பயிற்சி:

  நீங்கள் அமர்ந்திருக்கும் நாற்காலியில் நன்க அமர்ந்துகொள்ளங்கள்… பாதங்களைத் தரையில் பதியும் வகையில் நிமிர்ந்து அமர்ந்துகொள்ளுங்கள். உங்கள் தொடைகள் மீது கைகளை வைத்துக் கொள்ளுங்கள். இப்போது, கழுத்தை வலது, இடது புறம் திருப்புங்கள். வலது புறம் திரும்பும் போது சில விநாடிகள் அப்படியே இருக்க வேண்டும். இடது புறம் திருப்பும்போது சில விநாடிகள் அப்படியே இருக்க வேண்டும். பிறகு கழுத்தை மட்டும் அசைத்து தலையை மேலே உயர்த்தி, கீழே குனிந்து பயிற்சி செய்ய வேண்டும். இப்படி மூன்று முதல் ஐந்து முறை செய்யலாம்.

  இப்படி செய்யும்போது மூளைக்கு தேவையான சீரான ரத்த ஓட்டம் கிடைக்கிறது. ஆக்சிஜன், ஊட்டச்சத்து கிடைப்பதால் மூளை சுறுசுறுப்பாகிறது. கழுத்து வலி, கழுத்து இருக்கம் குறைகிறது.

  நாற்காலியில் அமர்ந்திருக்கும் நிலையில் வலது கையை எடுத்து வலது கன்னத்தில் பதித்து இடது புறமாக மெதுவாக திருப்பி சில விநாடிகள் வைக்க வேண்டும். அதேபோல் இடது பக்கமும் செய்ய வேண்டும். பிறகு இரு கைகளையும் குவித்து தாடையில் வைத்து தலையை மேலே உயர்த்த வேண்டும். பிறகு இரு கைகளையும் கோத்து தலையின் பின்புறமாக வைத்து பின்னந்தலையை அழுத்தி குனிந்து பார்க்க வேண்டும்.

  இப்படி செய்யும் போது கழுத்தெலும்பு, நரம்புகள் தூண்டப்படுகின்றன. மூளைக்கு தேவையான ஆற்றல் கிடைக்கிறது. உற்சாகத்துடன் வேலையைப் பார்க்க முடியும்.