வீடு வீடாக சென்று பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்த நபர்களை கண்டறியும் பணி தொடக்கம்!

  0
  3
  corona virus

  தமிழகத்தில் இதுவரை 70க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

  தமிழகத்தில் இதுவரை 70க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் நோய்த்தொற்று மேலும் பரவாமல் தடுக்கும் நோக்கோடு, வீடு வீடாக சென்று பாதிக்கப்பட்டவரோடு தொடர்பிலிருந்த நபர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தும் பணி மேற்கொள்ள “Containment plan’ திட்டம் தொடங்கப் பட்டுள்ளதாக தமிழக நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

  ttn

  அதில், ‘தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக 28.3.2020 அன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்கள் வசிக்கும் சென்னை, மதுரை, திருநெல்வேலி, வேலூர், ராணிப்பேட்டை, சேலம், விருதுநகர், ஈரோடு, அரியலூர், தஞ்சாவூர், திருப்பூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 12 மாவட்டங்களைச் சார்ந்த மாவட்ட ஆட்சித்தலைவர்கள், மருத்துவ கல்லூரி முதல்வர்கள், இணை இயக்குனர்கள் மற்றும் துணை இயக்குனர்களுடன் ஆலோசனை கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது.

  tt

  இக்கூட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோய் மேலும் பரவாமல் தடுக்கும் நோக்குடன் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நபர்களின் வீடுகளை சுற்றி உள்ள 5 கி.மீ தொலைவு வட்டத்தை CONTAINMENT ZONE ஆகவும் கூடுதலாக 2 கி.மீ தொலைவு வட்டத்தை BUFFER ZONE ஆகவும் வரையறுக்கப்பட்டு, இப்பகுதிக்குள் வரும் அனைத்து வீடுகளிலும் சுகாதார குழுக்கள் வீடு வீடாக சென்று தனிமைப் படுத்துதல் மற்றும் நோய் கட்டுப்பாடு நடவடிக்கைகள் மேற்கொண்டு இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் உள்ள நபர்களை கண்டறியும் பணியினை மேற்கொண்டனர். மேலும் நோய் தொற்று கண்டறியப்பட்ட நபரின் தொடர்பில் இருந்த நபர் யாரேனும் இப்பகுதிக்குள் இல்லை என்றால் அவர் எங்கு உள்ளார் என்பதையும் கண்டறிந்து தனிமைப்படுத்துதல் பணி மேற்கொள்ள கண்டைன்மெண்ட் பிளான் அறிவுறுத்தப்பட்டது.

  அதன் அடிப்படையில் நேற்று இரவு வரை 12 மாவட்டங்களில் 2,271 களப்பணியாளர்கள் வாயிலாக கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது, இப்பணியில் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 677 வீடுகளில் 3 லட்சத்து 96 ஆயிரத்து 547 நபர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. என்று குறிப்பிடப்பட்டுள்ளது.