வீடு வீடாக கொரோனா நோயாளிகளை தேடி அலையும் சுகாதாரத்துறை

  0
  1
  கொரோனா வைரஸ்

  சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்  உருவான  கொரோனா வைரஸ் தற்போது  199 நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

  சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்  உருவான  கொரோனா வைரஸ் தற்போது  199 நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.  உலகம் முழுவதும் 6 லட்சத்து 80 ஆயிரத்து 515 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுவரை 31,913 பேர் பலியாகி  உள்ளனர்.  இந்தியாவைப் பொறுத்தவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 25ஆகவும்,  பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 987 ஆகவும் அதிகரித்துள்ளது.  தமிழகத்தில் ஒருவர் இறந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50 ஆக இருந்தது. 

  coronavirus

  சைதாப்பேட்டையில் 54 வயது பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறி தென்பட்டுள்ளது, இதையடுத்து 50 வீடுகளுக்கு ஒரு பணியாளர் என்ற வகையில் வீடு வீடாக சென்று பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கொரோனாவால் பாதித்த 10 மாவட்டங்களில் வீடு வீடாக சென்று ஊழியர்கள், சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.60 வயதுக்கு மேலானவர்கள் அவர்களாகவே தங்களை தனிமைப்படுத்தி கொள்வும் சுகாதாரத்துறை அறிவுரை வழங்கியுள்ளது.