வீடியோ: சொந்த கல்யாணத்தை மறந்து.. கிரிக்கெட் பார்க்கும் திருமண ஜோடி!

  0
  2
  திருமண விழா

  சொந்த கல்யாணம் என்று கூட பார்க்காமல், ஆஸ்திரேலியா பாகிஸ்தான் அணிகள் மோதிய டி20 போட்டி மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்த திருமண ஜோடியின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரல் ஆகியுள்ளது.

  சொந்த கல்யாணம் என்று கூட பார்க்காமல், ஆஸ்திரேலியா பாகிஸ்தான் அணிகள் மோதிய டி20 போட்டி மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்த திருமண ஜோடியின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரல் ஆகியுள்ளது.

  ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 டி20 போட்டிகள், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் கட்டமாக 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் டி20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.

  aus vs pak

  இந்நிலையில் நேற்று நடைபெற்ற 2வது டி20 போட்டி ஆஸ்திரேலியாவின் தலைநகரான கேன்பராவில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் சேர்த்தது. கேப்டன் பாபர் அசாம் 50 ரன்களும், இப்திகார் அகமது 62 ரன்களும் எடுத்தனர். 

  அடுத்ததாக பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு துவக்க வீரர்கள் இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, பின்னர் வந்த ஸ்டீவ் ஸ்மித் நிலைத்து ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு எடுத்துச் சென்றார். அதிகபட்சமாக ஸ்மித் 80 ரன்கள் குவித்தார். இதன் மூலம் ஆஸ்திரேலியா 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என  முன்னிலை பெற்றது 

  marriage couple

  இந்நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் தனது திருமண விழா நடந்து கொண்டிருந்த போதும் மணப்பெண்ணுடன் இணைந்து ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் டி20 போட்டியை டி.வி.யில் கண்ணிமைக்காமல் கண்டுகளித்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வேகமாக பரவிவருகிறது.

  பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவரான ஹஸன் தஸ்லீம் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து வசித்து வருகிறார். தீவிர கிரிக்கெட் ரசிகரான இவர் பாகிஸ்தான் அணி ஆடும் எந்த ஒரு போட்டியையும் தவறாமல் பார்த்துவிடுவாராம். இந்நிலையில் துரதிஷ்டவசமாக, இவரது திருமண நாளன்று பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா இடையேயான டி20 போட்டி நடைபெற்றது. அவசர அவசரமாக திருமணத்தை முடித்துவிட்டு மணமகளைக் கூட்டிக்கொண்டு நேரடியாக டிவி முன் வந்து நின்று விட்டாராம்.

  இந்த புகைப்படத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.