வீடியோ கேம் கார் பந்தயம் – உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்பு

  0
  89
  நடிகர் அஜித்

  பார்முலா ஒன் அமைப்பு முன்னணி வீரர்கள் பங்கேற்ற வீடியோ கேம் கார் பந்தயத்தை நடத்தியது.

  லண்டன்: பார்முலா ஒன் அமைப்பு முன்னணி வீரர்கள் பங்கேற்ற வீடியோ கேம் கார் பந்தயத்தை நடத்தியது.

  கொரோனா பாதிப்பு உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. அதனால் விளையாட்டு போட்டிகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. பார்முலா ஒன் கார் பந்தயமும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பார்முலா ஒன் அமைப்பு வீடியோ கேம் மூலம் கார் பந்தய போட்டிகளை நடத்தியது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த முன்னணி வீரர்கள் தங்களுடைய வீட்டிலிருந்தே போட்டியில் கலந்து கொண்டனர்.

  மிகவும் பரபரப்பாக நடந்த வீடியோ கேம் கார் பந்தயத்தில் பெராரி நிறுவனத்தின் முன்னணி கார் பந்தய வீரர் சார்லஸ் லி-க்ளெர்க் முதலிடம் பிடித்து அசத்தினார். இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் பென் ஸ்டோக்ஸ் கடைசி இடத்தில் வந்தார். இந்த வீடியோ கேம் கார் பந்தய போட்டியை சுமார் 1 லட்சத்து 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் யூடியூப் இணையதளத்தில் நேரலையில் கண்டு ரசித்தனர்.