“வீடியோ காலில் அம்மாவின் இறுதிச்சடங்கு” : போலீஸ் அதிகாரி சொல்லும் கலங்க வைக்கும் காரணம்!

  0
  1
   ஷாண்டராம்

  தம்பியிடம் வீடியோ கால் செய்யச்சொல்லி அதில் என் அம்மாவின் இறுதி சடங்கை பார்த்து மனம் தேற்றி கொண்டேன்’ என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார். 

  ஆந்திரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ரயில்வே காவல் உதவி ஆய்வாளர் ஷாண்டராம். இவர் கடந்த 29 ஆம் தேதி விஜயவாடாவில் ஊரடங்கு பணியில் இருந்த போது இவரின் தாய் இறந்து விட்டதாக செய்தி வந்துள்ளது. இதனா ல் அவருக்கு உடனடியாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ஷாண்டராம் ஊருக்கு செல்லவில்லை.  இதுகுறித்து அறிந்த இன்ஸ்பெக்டர் பங்கர்ராஜூ, ஏன் தாயின் இறுதி சடங்கிற்கு செல்லவில்லை என விசாரித்துள்ளார். 

  tt

  அப்போது அதற்கான காரணத்தை கூறிய  காவலர் ஷாண்டராம், ‘தாயின் இறுதி சடங்கிற்கு செல்லவேண்டுமென்றால் 4 மாவட்டம், 40 ஷெக்போஸ்டுகளை தாண்டி செல்ல வேண்டும். ஊருக்கு சென்றாலும் பலரும் அங்கு வந்திருப்பார்கள். இதனால் அவர்களுக்கு கொரோனா தொற்று  ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே என் தம்பியிடம் வீடியோ கால் செய்யச்சொல்லி அதில் என் அம்மாவின் இறுதி சடங்கை பார்த்து மனம் தேற்றி கொண்டேன்’ என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார். 

  tt

  இந்த செய்தியிலிருந்தே நாம் பாதுக்காப்பாக இருக்க எத்தனை பேரின் தியாகம் தேவைப்படுகிறது என்றும் கொரோனா தொற்று எத்தனை அபாயகரமானதாக பார்க்கப்படுகிறது, இதனால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதையுமே உணர்த்துகிறது.