வீக் எண்ட் வைப்ஸ் என பாத்ரூமிலிருக்கும் வீடியோவை வெளியிட்ட மீரா மிதுன்! வருத்தெடுக்கும் நெட்டிசன்கள்!! 

    0
    1
    மீரா மிதுன்

    பிக்பாஸ் வீட்டுக்குள்ளே சேரன் மீது தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்து குறும்படம் மூலம் அசிங்கப்பட்ட வெளியேறிய மீரா மிதுன், வெளியே வந்த பிறகும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார்

    பிக்பாஸ் வீட்டுக்குள்ளே சேரன் மீது தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்து குறும்படம் மூலம் அசிங்கப்பட்ட வெளியேறிய மீரா மிதுன், வெளியே வந்த பிறகும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். பண மோசடி புகார் உள்ளிட்ட வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ளன. இந்நிலையில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை… லஞ்சம் வாங்குவது அதிகரித்துவிட்டது, காவல்துறையினர் உண்மைக்கு புறம்பாக நடந்துகொள்கின்றனர், சினிமாவில் ஆணாதிக்கம் அதிகரித்துவிட்டது என்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

    meera mithun

    பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றப்பலருக்கு சினிமாவில் நடிக்க பல வாய்ப்புகள் நாடி வந்த நிலையில் மீராமிதுன் மட்டும் தமிழில் வாய்ப்பு கிடைக்காததால் பாலிவுட்டுக்கு சென்றுவிட்டதாகவும் தகவல் கசிகின்றன. அவ்வப்போது கவர்ச்சிப் போட்டோக்களை இணையத்தில் வெளியிட்டு முகம் சுழிக்க வைத்துவரும் மீரா தற்போதும் அதே போன்ற ஒரு வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.  

     

     

    பாத்ரூமில் இருக்கும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ள மீராமிதுன், அந்த வீடியோவில்  தலைமுடியை கோதியவாறு போஸ் கொடுக்கிறார். அத்துடன், நீண்ட நேரம் குளிப்பதே மகிழ்ச்சி என்றும், வீக் எண்ட் வைப்ஸ் என்றும் பதிவிட்டுள்ளார்.