விஸ்வாசம் வெற்றியை மலேசியாவில் உணவு வழங்கி கொண்டாடிய ரசிகர்கள்!

  19
  viswasam

  விஸ்வாசம் திரைப்படத்தின் வெற்றியை மலேசியா ரசிகர்கள் உணவு வழங்கி கொண்டாடியுள்ளனர்

  சென்னை: விஸ்வாசம் திரைப்படத்தின் வெற்றியை மலேசியா ரசிகர்கள் உணவு வழங்கி கொண்டாடியுள்ளனர்.

  சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் திரைப்படம் கடந்த 10ம் தேதி  உலகம் முழுவதும் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. உலகம் முழுவதும் உள்ள தல ரசிகர்கள், அவருக்கு பேனர்கள் வைத்து அமர்க்களப்படுத்தி வந்தனர்.குடும்ப படமான ‘விஸ்வாசம்’திரைப்படத்தில் சண்டைக் காட்சிகளை காட்டிலும் செண்டிமெண்ட் காட்சிகள் ஏராளம் உள்ளது. படம் வெளியாகி 18 நாள் கடந்த நிலையில் இன்னும் திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டு வருகிறது. மேலும் விஸ்வாசம் திரைப்படம்  சுமார் ரூ 125 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது.

  இந்நிலையில், தல அஜித்திற்கு மலேசியாவில் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். விஸ்வாசம் திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக மலேசியா ரசிகர்கள் 80 பேருக்கு உணவு வழங்கி “விஸ்வாசம்” படத்தின் வெற்றியை கொண்டாடியுள்ளனர்.