விஷாலின் ‘அயோக்யா’ ஷூட்டிங் ரத்து!

  0
  10
  vishal

  நடிகர் விஷால் நடித்து வரும் ‘அயோக்யா’ படத்தின் ஷூட்டிங் திடீரென ரத்து செய்யப்பட்டதால், தயாரிப்பு நிறுவனத்திற்கு பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

  சென்னை: நடிகர் விஷால் நடித்து வரும் ‘அயோக்யா’ படத்தின் ஷூட்டிங் திடீரென ரத்து செய்யப்பட்டதால், தயாரிப்பு நிறுவனத்திற்கு பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

  லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் பி.மது தயாரிப்பில் வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் ‘அயோக்யா’ திரைப்படத்தின் ஷூட்டிங் கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் முக்கிய காட்சிகள் விழுப்புரம் அருகே கூனிமேடு மசூதி அருகே படமாக்கப்பட இருந்தன. அதற்கான முன் அனுமதியும் படக்குழு தரப்பில் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.

  இதன் ஷூட்டிங்கிற்காக கடந்த டிச.6ம் தேதி விஷால் மற்றும் ராஷி கண்ணா உட்பட படக்குழுவினர் நேரத்திற்கு ஆஜராகியிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அன்றைய தினம் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நினைவு தினம் என்பதால், அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க ’அயோக்யா’ படக்குழுவினருக்கு காவல் துறை அனுமதி அளிக்கவில்லை. இதனால், ‘அயோக்யா’ படத்தின் ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டது. இந்த ஷூட்டிங் ரத்தானதால் தயாரிப்பு நிறுவனத்திற்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

  தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர்-காஜல் அகர்வால் நடித்த ‘டெம்பர்’ படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காகும். இப்படம் ஹிந்தியின் ரன்வீர் சிங் நடிப்பில் ‘சிம்பா’ படமாக உருவாகியுள்ளது. விரைவில் இப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.