விஷவாயு தாக்கி இளைஞர் பலி : எக்ஸ்பிரஸ் அவென்யூ மால் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு!

  0
  3
  EA Mall

  இந்த வழக்கில்,  ஒப்பந்ததாரர் தண்டபானியை காவல்துறையினர் கைது செய்தனர். 

  சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் நேற்று அதிகாலை கழிவு நீர்த் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக அருண் குமார், ரஞ்சித் குமார் உட்பட 5 பேர் சென்றனர். அப்போது குழிக்குள் இறங்கிய ரஞ்சித் குமார் விஷவாயு தாக்கியதால் மயக்கமடைந்தார். அதனைத் தொடர்ந்து, ரஞ்சித்தை காப்பாற்ற உள்ளே இறங்கிய அருண் குமார் விஷவாயு தாக்கியதால் உயிரிழந்தார். இந்த வழக்கில்,  ஒப்பந்ததாரர் தண்டபானியை காவல்துறையினர் கைது செய்தனர். 

  Arun kumar

  இது குறித்து பேசியை காவல்துறையினர், கழிவு நீர்த் தொட்டியைச் சுத்தம் செய்வதற்கு ஆட்களை இறக்கக் கூடாது என்ற அரசின் கட்டளையை மீறி எக்ஸ்பிரஸ் அவென்யூ உரிமையாளர் ஆட்களை வரவழைத்துள்ளார். முதலாவதாக இறங்கிய ரஞ்சித் மயக்கமடைந்தவுடன் ஊழியர்களும் ஒப்பந்ததாரரும் தீயணைப்புத் துறைக்குத் தகவல் அளிக்க மறுத்துள்ளனர்.  

  EA Mall

  இதனால், எக்ஸ்பிரஸ் அவென்யூ உரிமையாளர், பராமரிப்பாளர், ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரின் மீதும் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, கழிவு நீர்த் தொட்டியில் ஆட்களை இறக்கக் கூடாது என்பது குறித்து 2013 ஆம் ஆண்டு எஸ்.சி மற்றும் எஸ்.டி ஆக்ட் இயற்றப்பட்டது. அந்த சட்டங்களின் கீழும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.