விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவன்.. காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை!

  0
  4
  selva

  கல்லூரி மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் தொடர் கதையாகவே உள்ளது.

  கல்லூரி மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் தொடர் கதையாகவே உள்ளது. இதே போல சிவகங்கை மாவட்டத்திலும் ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் மழவராயனேந்தல் என்னும் கிராமத்தைச் சேர்ந்த கார்மேகம் என்பவரின் மகன் செல்வா. இவர்  மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். 

  ttn

  நேற்று வழக்கம் போலக் கல்லூரிக்குச் சென்று விட்டு வீடு திரும்பிய செல்வா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அப்போது வீட்டில் யாரும் இல்லாததால், அதனை யாரும் பார்க்கவில்லையாம். நேற்று மாலை வீடு திரும்பிய பெற்றோர் செல்வா மயங்கிய நிலையில் கீழே கிடைப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்தினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். உடனே அங்குச் சென்ற பொதுமக்கள், அவர் விஷம் குடித்திருப்பதைக் கண்டு பிடித்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இது செல்வாவின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  ttn

  தகவல் அறிந்து சென்ற போலீசார் அவரது உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் செல்வாவின் கல்லூரியில் ஏதேனும் பிரச்சனையா?.. அல்லது அவரது உடல் நலம் பாதிக்கப் பட்டிருந்ததா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.