விவேக் ஓபராய் எனும் பாஜக கைக்கூலி; பிஎம் நரேந்திர மோடி படத்துக்கு திமுக, காங்கிரஸ் தடைகோருவது ஏன்?!

  0
  1
  பாஜக ஆதரவாக விவேக் ஓபராய்

  பாஜகவுக்கு மிக நெருக்கமான நடிகர்களில் விவேக் ஓபராயும் ஒருவர். 2014-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் உத்தர பிரதேச பாஜக தலைவர் வி.கே.சிங் என்பவரை ஆதரித்து விவேக் ஓபராய் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

  ஓமங் குமார் இயக்கத்தில் விவேக் ஓபராய் முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ள படம் பிஎம் நரேந்திர மோடி (PM Narendra Modi). பிரதமர் மோடியின் அரசியல் பயணத்தை மையமாக கொண்டு இத்திரைப்படம் இயக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஏப்ரல் 5 ஆம் தேதி வெளியாகவுள்ள இத்திரைப்படத்துக்கு தடை விதிக்கக்கோரி திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி உள்ளனர்.

  ஜாவேத் அக்தர்

  javed

  மேரி கேம், சர்ப்ஜித் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்று படங்களை இயக்கியவர் ஓமங் குமார். இந்த இரு படங்களுக்காக பாராட்டப்பட்ட ஓமங் குமார், நரேந்திர மோடி படத்தை இயக்கியதன் மூலம் அவப்பெயரை பெற்றுள்ளார். பிஎம் நரேந்திர மோடி படத்திற்கு பாடல் எழுதாத பிரபல பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் பெயர் அதில் குறிப்பிடப்பட்டது விமர்சனத்தை சந்தித்து வருகிறது. என் பெயர் நரேந்திர மோடி படத்தில் இடம்பெற்றுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது என அவர் தெரிவித்திருந்தார்.  அதேபோல் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க மோடி ஆதரவாக எடுக்கப்பட்டுள்ளது என எதிர்கட்சியினர் விமர்சித்து வருகிறார்கள்.

  விவேக் ஓபராய் – பாஜக பின்னணி

  sangh

  பாஜகவுக்கு மிக நெருக்கமான நடிகர்களில் விவேக் ஓபராயும் ஒருவர். 2014-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் உத்தர பிரதேச பாஜக தலைவர் வி.கே.சிங் என்பவரை ஆதரித்து விவேக் ஓபராய் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அதேபோல் பிரதமர் நரேந்திர மோடிக்கு விவேக் மிகவும் இணக்கமானவர்.

  மோடி

  மோடிக்கு ஆதரவளிக்கும் விதமாகதான் அவர் இந்த படத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. 

  திமுக – காங்கிரஸ் எதிர்ப்பு

  திமுக

  தேர்தல் நேரத்தில் மோடியை ஆதரிக்கும் விதமாக பிஎம் நரேந்திர மோடி திரைப்படம் வெளியாக இருக்கிறது என திமுக தரப்பு குற்றம்சாட்டியது. தேர்தல் ஆணையத்திடம் திமுக இந்த படத்துக்கு தடைகோரியது. அதேபோல் காங்கிரஸ் கட்சியும் தேர்தல் ஆணையத்தை சந்தித்து இந்த படத்துக்கு தடைகோரியுள்ளது. பிஎம் நரேந்திர மோடி திரைப்படம் பாஜகவின் அரசியல் ஆதாயத்துக்காக எடுக்கப்பட்டது என காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

  இராணுவ உடையில் பாஜக தலைவர் மனோஜ் திவாரி

  மனோஜ்

  பாஜக தரப்பு வாக்கு சேகரிப்பதற்காக அனைத்து வகையிலும் முயற்சி செய்து வருகிறது. புல்வாமா தாக்குதலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திய பாஜக, திரைப்படத்துறையிலும் ஆதிக்கம் செலுத்துகிறது. பாஜக அமைச்சர் அருண் ஜெட்லி திரைப்படத்துக்கு தடைகோருவது கருத்து சுதந்திரத்தில் தலையிடும் விஷயம் என தெரிவித்திருக்கிறார். பாஜக ஆட்சி காலத்தில் பத்மாவதி, உட்டா பஞ்சாப் துவங்கி எத்தனை படங்கள் வெளியாவதற்கு சிரமப்பட்டது என பொது மக்கள் அறியாததல்ல, பிஎம் நரேந்திர படத்துக்கு பாஜக கருத்து சுதந்திரம் பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளதென பொது வெளியில் விமர்சிக்கப்படுகிறது.

  இதையும் வாசிங்க

  காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் கமல் பட நாயகி: வெற்றி வாய்ப்பு கிட்டுமா? 

  தி.மு.க கூட்டணி தோல்வியை அடையும்: மு.க.அழகிரி உறுதி ; கடுப்பான தி.மு.க.வினர்!

  ஊழல் செய்தால் விஷ ஊசி போட்டு கொன்று விடுவேன்: சீமான் விமர்சனம்