விவேகா வரிகள், ஜிப்ரான் இசை, விக்ரம் குரல்…! கண்டிப்பா ஹிட் அடிக்கும்…!

  0
  1
  vikram

  தனது இசையில் நடிகர் சீயான் விக்ரம் பாடியதாக இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்தை பதிவிட்டு மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

  தனது இசையில் நடிகர் சீயான் விக்ரம் பாடியதாக இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது டுவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

  “தூங்காவனம்” பட இயக்குனர் ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் “கடாரம் கொண்டான்”. தனது சிஷ்யன் இயக்கியுள்ள இந்த படத்தை தானே தயாரித்துள்ளார் கமல்ஹாசன். படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

  இந்நிலையில், ஜிப்ரான் தனது ட்விட்டர் பக்கத்தில்,  “பன்முக திறமை கொண்ட விக்ரம் சார், “கடாரம் கொண்டான்” படத்துக்காக ஒரு பாடலை பாடியுள்ளார்.  முழு எனர்ஜியையும், தன்னம்பிக்கையையும், உற்சாகத்தையும் அளிக்கக்கூடியதாகவும் பலருக்கு இந்தப் பாடல் கொடுக்கும். மேலும், இப்படம் மோடிவேஷனல் பாடலாக இருக்கும் என்றும் நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

  “கந்தசாமி” திரைப்படத்தில் தேவிஸ்ரீபிரசாத் இசையில் நிறைய பாடல்களை பாடிய விக்ரம், நீண்ட இடைவெளிக்கு பிறகு சாமி ஸ்கொயர் படத்தில் பாடினார். தற்போது மீண்டும் ஒரு பாடலை பாடியுள்ளது சீயான் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாடலாசிரியர் விவேகா வரியில் உருவாகியுள்ள அந்த பாடலை சீக்கிரம் ரிலீஸ் செய்யுங்கள்..! விக்ரம் குரலை கேட்க ஆர்வமாக உள்ளோம்…!