விழுப்புரத்தில் கொரோனா இல்லை என மருத்துவமனை விடுவித்த நபருக்கு கொரோனா உறுதி! வலைவீசி தேடும் காவல்துறை

  0
  5
  corona patient

  சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மக்களிடையே பீதியை உண்டு பண்ணியுள்ளது. மேலும் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது

  சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மக்களிடையே பீதியை உண்டு பண்ணியுள்ளது. மேலும் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனா வைரஸால் இந்தியாவில் சுமார் 5 ஆயிரத்து 480 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 218 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் தமிழகத்தில் 700க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டதுடன் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 

  coronavirus

  இந்நிலையில் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆறாம் தேதி அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளிக்கு கொரோனா இல்லை என நேற்று இரவு விடுவிக்கப்பட்டார். டெல்லியைச் சேர்ந்த இவருக்கு பரிசோதனை முடிவில் கொரோனாஇருப்பது உறுதியானது. அதிகாரிகள் கவனக்குறைவால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவரை மருத்துவமனை நிர்வாகம் விடுவித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காணாமல்போன நோயாளியை விழுப்புரம் மாவட்ட போலீசார், 3 தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.