விளையாட போன சிறுமி போஸ்ட்மார்ட்டத்துக்கு ஏன் அனுப்பப்பட்டார் – கதற வைக்கும் காரணம் ..

  0
  1
  Kaushambi

  உத்தரபிரதேசத்தின் கவுசாம்பி மாவட்டத்தில் உள்ள கோக்ராஜ் காவல் நிலையப் பகுதியில் வசித்து வரும் 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள அதிர்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது . 
  கான்பூர் தேஹத் மாவட்டத்தில்  உள்ள ஒரு கிராமத்தில் ஒரு  பாம்புபிடிப்பவர் 15 நாட்களாக  தனது குடும்பத்தினருடன்   குடிசை கட்டி வசித்து வந்தார். 
  வியாழக்கிழமை மாலை 5:30 மணியளவில் அவரது மகள் வீட்டை விட்டு வெளியே விளையாட  சென்று,அதற்கு பிறகு அவர் திரும்பி வரவில்லை.அவரின் மகள்  நீண்ட நேரம் வீடு திரும்பாததால் சிறுமியின் தந்தை  மிகவும்  தவித்தார்.

  7 year girl

  அதனால்  இரவு 10 மணியளவில், அந்த சிறுமியின்  குடும்பத்தினர் கோக்ராஜ் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையைத் தொடங்கினர்.அவர்களின் தேடுதல் வேட்டையின் போது, ​​ரயில் நிலையத்திலிருந்து 600 மீட்டர் தொலைவில் ஒரு புறா பண்ணையில் அந்த சிறுமியின்  சடலம் கண்டெடுக்கப்பட்டது.சிறுமியின் இறந்த உடலின் நிலையைப் பார்த்தபோது,பாலியல் பலாத்காரத்திற்குப் பிறகு அவர் கொலை செய்யப்பட்டதாகத் தெரிவதாக போலீசார் கூறினர் .

  போலீசார் சிறுமியின் சடலத்தை எடுத்து பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். குழந்தையின் மாமா பாலியல் பலாத்காரம் செய்து   கொலை செய்ததாக சிறுமியின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார், தற்போது, ​​குற்றம் சாட்டப்பட்ட மாமா தலைமறைவாக உள்ளார்.