விளக்கு ஏற்றலாம், விளக்கம் கொடுக்கலாம், கைகளைத் தட்டலாம்!- கொரோனா ஊரடங்கு குறித்த பிரபல இயக்குநரின் கவிதை!!

  0
  24
  இயக்குநர் ராசி அழகப்பன்

  கொரோனா வைரஸின் தீவிரத்தால் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியிருப்பதால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் திணறிவருகின்றனர்.

  coronavirus poet

  இருப்பினும் பால், மளிகை உள்ளிட்ட  அத்தியாவசிய கடைகள் மட்டும் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. மக்கள் தேவையின்றி வெளியே நடமாடுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. 

  கவிதை

  இந்நிலையில் இயக்குநர் ராசி அழகப்பன் கால ஞானம் என்ற தலைப்பின் கீழ் எழுதிய தலைப்பில், “ நீண்ட பாதைகள்- பாதச்சுவடுகள் இன்றி..! வெளிச்சத்திலேயே இருள் பெருகிக் கணக்கிறது. கர்ப்பத்தில் கிடந்ததுபோல் இன்று கூரைகளுக்குள் … அற நூல்கள் சொல்லாத தவத்தை அறைகள் சொல்கின்றன! இருப்பவர் கதவை மூடியபடி… இல்லாதவர் வயிற்றை பார்த்தப்படி… விளக்கு ஏற்றலாம். விளக்கம் கொடுக்கலாம். கைகளைத் தட்டலாம். ஆலயங்கள் சாத்தலாம். அறிக்கைகள் விடலாம்! என்ன செய்யட்டும்- புலப்படாத கரோனா புண்ணியம் கட்டிக் கொள்கிறது! மனிதம் வாழச் செய்யும் பிழையை இன்று இது செய்கிறதோ? இருக்கட்டும்! ஊர் கூடித் தேரிழுக்க உதவும் கரங்களாவோம்! நேசிக்கத் தெரிந்தவர்கள் பேசிக் கொள்ளட்டும்! பேசத் தெரிந்தவர்கள் மெளனம் கற்கட்டும்! இடைவெளியின் ஞானம் அகிலம் உணரட்டும்! மறவாதே! பசிக்கு முன் புத்தனும் ஞானியல்ல!” என குறிப்பிட்டுள்ளார்.