விறகு அடுப்பில் மண்பானை சமையல்… மலைக்கோவிலூர் முருகவிலாஸ் ஹோட்டல்.

  0
  4
  முருகவிலாஸ் ஹோட்டல்

  கரூரில் இருந்து திண்டுக்கல் செல்லும் பைப்பாஸ் சாலையில் 10 வது கிலோ மீட்டரில் இருக்கிறது மலைக்கோவிலூர்.பாலம் கடந்ததும் வரும் இந்திரா நகரில் அமைந்துள்ள இந்த முருகவிலாஸ் உணவகம் ஒரு நீண்ட,கம்பந்தட்டை வேய்ந்த கொட்டகைதான். பக்கவாட்டு சுவர்களுக்குப் பதில் பச்சை நிற வலை கொண்டு மறைத்திருக்கிறார்கள்.

  கரூரில் இருந்து திண்டுக்கல் செல்லும் பைப்பாஸ் சாலையில் 10 வது கிலோ மீட்டரில் இருக்கிறது மலைக்கோவிலூர்.பாலம் கடந்ததும் வரும் இந்திரா நகரில் அமைந்துள்ள இந்த முருகவிலாஸ் உணவகம் ஒரு நீண்ட,கம்பந்தட்டை வேய்ந்த கொட்டகைதான். பக்கவாட்டு சுவர்களுக்குப் பதில் பச்சை நிற வலை கொண்டு மறைத்திருக்கிறார்கள்.

  food

  கடை துவங்கி ஐந்து ஆண்டுகள்தான் ஆகிறது.அதற்குள் யாரைக் கேட்டாலும் சொல்கிறார்கள். அதோடு ‘அவங்கதர்ற தண்ணிக்கொழம்பு ரொம்ப நல்லாருக்கும்ங்க’ என்று நமது ஆவலைத் தூண்டி அனுப்புகிறார்கள்
  இங்கே மட்டன் ஃபிரை,நாட்டுக்கோழி உப்புக்கறி, குடல் ஃபிரை,மீன் ரோஸ்ட்,காடை ரோஸ் ஆகியவை பிரபலமாக இருக்கின்றன.பொதுவாக மேலே சொன்ன எந்த ஐட்டத்தை வாங்கினாலும் 120 ரூபாய் வசூலிக்கிறார்கள்
  ஆனால்,மீல்ஸ் என்று ஆர்டர் செய்தால் நாட்டுக்கோழி, மட்டன்,மீன் ரோஸ்ட் இதில் நீங்கள் விரும்பும் எதாவது ஒன்றை காம்போவாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்

  food

  சாப்பாட்டுக்கு,மீன் குழம்பு,மட்டன் குழம்பு,நாட்டுக்கோழி குசம்பு,ரசம் தருகிறார்கள். தயிர் வேண்டுமானால் எக்ஸ்ட்ரா.எல்லா குழம்புகளுமே சுவையில் போட்டி போட்டாலும்,கிட்டத்தட்ட ரசம்போல இருக்கும் நாட்டுக்கோழி தண்ணிக் குழம்பு தனித்த சுவையுடன் முன்னிலையில் இருக்கிறது.

  food

  இங்கே தரப்படும் உப்புக்கறி வித்தியாசமாக இருக்கிறது. சிவகங்கை, ராமநாதபுரம் பகுதிகள்தான் உப்புக்கறியின் தாய்வீடு.அங்கே உப்புக்கறி என்றால்,சின்ன வெங்காயம் ,காய்ந்த மிளகாய்,உப்பு,நல்லெண்ணை அவளவுதான்.இந்த மலைக்கோவிலூர் முருகவிலாஸ் உணவகத்தில் கூடவே மிளகு சீரகமெல்லாம் சேர்த்திருக்கிறார்கள்.அதுவும் சிறப்பாகவே இருக்கிறது.
  இவைதவிர இங்கே மட்டன் பிரியாணியும் சிக்கன் பிரியாணியும் உண்டு.இரண்டுமே ஒரு பிளேட் 150 ரூபாய்தான்.

  food

  உணவகத்தின் கிச்சன் மிகவும் சுத்தமாக இருக்கிறது. விறகடுப்பு வைத்துத்தான் சமையல்.எல்லாவற்றுக்கும் மண்பாத்திரங்களையே பயன்படுத்துகிறார்கள்.இங்கே சிக்கன் என்றால் நாட்டுக்கோழி மட்டும்தான்,பிராய்லர் சிக்கனை கிட்டேயே சேர்ர்பதில்லையாம்.
  நல்ல இடை வெளிவிட்டு,விசாலமான மேஜைகளும்,வசதியான இருக்கைகளும் போட்டு இருப்பதால் சுதந்திரமாகச் சாப்பிடலாம்.

  food

  பகல் 12 மணிக்கு பரிமாறத் துவங்குகிறார்கள்.மாலை நான்கு மணிவரை உணவு வழங்குகிறார்கள். மாலை,அல்லது இரவு வேளையில் சாப்பிட வருபவர்கள் முன்கூட்டியே போன் செய்து சொல்லிவிட்டுத்தான் வரவேண்டும்
  அப்படியே வந்தாலும்,பெண்கள், குழந்தைகள் சகிதம் குடும்பத்தோடுதான் வரவேண்டும். ஆண்கள் மட்டும் என்றால் ஆர்டர் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.காரணம் உங்களுக்கே தெரியும்.