விரைவில் வெளியாகவுள்ள பாலாவின் வர்மா!

  0
  3
  வர்மா

  சமீபத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் ஆதித்யா வர்மா வெளியான நிலையில் பாலாவின் வர்மா திரைப்படமும் விரைவில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். 

  சமீபத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் ஆதித்யா வர்மா வெளியான நிலையில் பாலாவின் வர்மா திரைப்படமும் விரைவில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். 

  தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தைத் தமிழில் வர்மா என்ற பெயரில் பாலா இயக்கினார். ஆனால் அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான E4 எண்டெர்டெய்ன்மென்ட்டுக்கு அது திருப்தி தராததால் வர்மா படத்தை ரிஜெக்ட் செய்தது. தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனர்கள் பட்டியலில் இருக்கும் பாலா. முதன் முதலாக இயக்கிய ரீமேக் படம் வர்மா.

  அதைத்தொடர்ந்து மீண்டும் துருவ் விக்ரமை வைத்து, ஆதித்ய வர்மா என்ற பெயரில் அர்ஜுன் ரெட்டி இயக்குநர் சந்தீப் ரெட்டியிடம் உதவியாளராக  இருந்த இயக்குநர்  கிரிசய்யா என்பவர் படத்தை எடுத்தார். இந்த திரைப்படம் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

  வர்மா

  இந்நிலையில் பாலா இயக்கிய வர்மா படத்தை சீயான் விக்ரம் பார்த்ததாகவும், அவருக்கு மிகவும் பிடித்ததால் அதனை அவரே தயாரிக்க முன் வந்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது. விரைவில் பாலா இயக்கிய வர்மா விக்ரமின் தயாரிப்புடன் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.