விமானத்தைப்போல ரயிலிலுள்ள பயணிகளை மகிழ்விக்க களமிறக்கப்படும் பணிப்பெண்கள்!

  0
  2
  air hostess

  விமானத்தில் இருப்பது போல ரயிலிலும் உபசரிப்பு பெண்களை நியமிக்க ஐஆர்சிடிசி திட்டமிட்டுள்ளது. 

  விமானத்தில் இருப்பது போல ரயிலிலும் உபசரிப்பு பெண்களை நியமிக்க ஐஆர்சிடிசி திட்டமிட்டுள்ளது. 

  ரயில்வே துறையை கொஞ்சம்கொஞ்சமாக தனியார் வசம் சென்றுகொண்டிருக்கிறது. முதற்கட்டமாக தேஜஸ் என்ற ரயிலை தனியார் இயக்குகிறது. அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் தொடங்கவுள்ள  இந்த ரயில் டெல்லி மற்றும் உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோ இடையே இயக்கப்படவுள்ளது. இந்த ரயிலில் இந்த ரயிலில், விமானங்களில் உள்ளது போல உபசரிப்பு பெண்கள், பயணிகளுக்கு உதவி செய்வார்கள் என ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது. மேலும் ரயிலில் பயணிகளை உற்சாகப்படுத்த பல்வேறு பொழுது போக்கு நிகழ்ச்சிகளுக்கு ஐஆர்சிடிசி திட்டமிட்டுள்ளது.

  air hostess

  அதுமட்டுமின்றி, ஐஆர்சிடிசியின் மூலம் தேஜஸ் ரயிலில் பயணம் செய்பவர்கள், வாகனங்கள், தங்கும் விடுதி, விமான டிக்கெட் உள்ளிட்டவற்றை முன்பதிவு செய்துகொள்ளலாம்.